ஸ்டாலின் எப்போதும் அவுட் ஆப் கண்ட்ரோல் தான்.. இந்த ஜில்லாவுடைய அடுத்த முதல்வர் செந்தில் பாலாஜிதான்!! ஆதாரத்தை வெளியிட்ட மாஜி அமைச்சர்!!

0
133
Stalin is always out of control.. Senthil Balaji is the next chief minister of this district!! Ex-minister who released the evidence!!
Stalin is always out of control.. Senthil Balaji is the next chief minister of this district!! Ex-minister who released the evidence!!

ஸ்டாலின் எப்போதும் அவுட் ஆப் கண்ட்ரோல் தான்.. இந்த ஜில்லாவுடைய அடுத்த முதல்வர் செந்தில் பாலாஜிதான்!! ஆதாரத்தை வெளியிட்ட மாஜி அமைச்சர்!!

இன்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் கரூர் மாவட்டத்தில் திமுக வின் அவதூறுகள் குறித்து டிஜிபி யிடம் புகார் மனு அளித்ததோடு அங்கிருந்த செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அதில் அவர் கூறியதாவது, விடியா ஆட்சி வந்த பிறகு தமிழகத்தில் கொலை கொள்ளை அதிகரித்ததோடு பாலியல் சீண்டர்களும் பாலியல் தொல்லைகளும் பெண்களுக்கு அதிக அளவில் அரங்கேரி வருகிறது. அதேபோல பல மாவட்டங்கள் முதல்வரின் கண்ட்ரோலை விட்டு அவுட் ஆப் கண்ட்ரோலில் தான் உள்ளது.

அந்த வகையில் கரூர் மாவட்டமானது ஐஜி அல்லது டிஜிபி கண்ட்ரோலில் இல்லாமல் முதல்வரின் கண்காணிப்பிலும் இல்லாமல் செந்தில் பாலாஜியின் கோட்டையாக இருந்து வருகிறது.

அதனை நிரூபிக்கும் வகையில் முதல் கட்டமாக ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் நடக்கும் பொழுது அதிமுக நிர்வாகிகளின் கார்களின் மீது திமுக ரவுடிகளை ஏவி விட்டு ஆசிட் வீச்சு போன்றவற்றை நடத்தி கலவரம் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீஸார்கள் அவ்வாறு ஆசிட் அடித்தவர்கள் பற்றி செய்தியாளர்கள் முன்னிலையில் தெளிவான விவரங்களை கூறியும் அவர்கள் மீது எந்த ஒரு வழக்கும் போடவில்லை. அவ்வாறு ஆசிட் வீச்சு நடத்தியவர்கள் தற்போது வரை கரூர் மாவட்டத்தில் சுதந்திரமாக உலாவி தான் வருகின்றனர்.

இதற்கு அடுத்தபடியாக அதிமுக ஐடி விங் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் குறித்தும் தற்பொழுது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது போல அடுத்தடுத்து செந்தில் பாலாஜி ரவுடிசம் செய்வதை யாரும் கண்டு கொள்வதில்லை. ஆட்சி இருக்கிறது என்று ஆடக்கூடாது காலச்சக்கரம் மாறும் பாராளுமன்ற தேர்தல் சட்டமன்றத் தேர்தல் என்று அடுத்தடுத்து எதிர் கொள்ள வேண்டி உள்ளது.

புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி மற்றும் எடப்பாடி காலத்தில் இவ்வாறான ஆட்சி முறையை யாரும் கண்டதில்லை. மக்களே இந்த ஆட்சி எப்பொழுது முடிந்த தொலையும் என்று எண்ணும் நிலை வந்து விட்டது இவ்வாறு புகார் அளித்துவிட்டு செய்தியாளர்கள் முன்னிலையில் செந்தில் பாலாஜி குறித்து அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.மேலும் அதிமுக நிர்வாகிகளை அவதூறாக பேசியது குறித்த ஆடியோ பதிவையும் செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.