பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜைக்கு பசும்பொன் கிராமத்திற்கு சென்ற மு க ஸ்டாலின், அங்கு கொடுக்கப்பட்ட திருநீரை வாங்கி கழுத்தில் கொஞ்சம் தடவிக்கொண்டு, மிச்சம் இருந்ததை கீழே போட்டுவிட்டு சென்றிருக்கின்றார்.
இந்த விஷயம் வீடியோவில் பதிவாகி இருக்கின்றது அது சமூக வலைதளங்களில் அதிகமாக பரவியும், வருகின்றது.
இந்த சூழ்நிலையில், தேவரை அவமதித்த ஸ்டாலின் என்று ட்விட்டரில் ஒரு ஹேஷ்டேக்கை உருவாக்கி, அது ட்ரெண்ட் ஆகும்வரை, சென்றிருக்கிறது.
அதில் முக ஸ்டாலினுக்கு எதிராக மக்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மு க ஸ்டாலின் தேவர் ஜெயந்திக்கு யார் வர சொன்னது? திருநீரை வாங்கிக்கொண்டு கழுத்தில் தடவி விட்டு, கீழே கொட்டி விட்டு போகிறார். என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
ஸ்டாலினுக்கு ஒவ்வொரு முறையும் விபூதியால் வரும் வேதனை இம்முறை இந்த விபூதியை தான் திமுகவின் தோல்விக்கு அஸ்திவாரமாக இருக்கப்போகிறது. குல்லா போட்டுக் கொண்டு கஞ்சி குடிச்சா பகுத்தறிவு, நெற்றியில் விபூதி இட்டுக்கொண்டால், மூடநம்பிக்கையா? தேவருடைய திருக்கோயிலுக்குள் வந்து அவரை அசிங்கபடுத்திய ஸ்டாலினே! உடனே பசும்பொன் கிராமத்திற்கு வந்து மன்னிப்பு கேட்டு விடு.
இல்லையென்றால், நீ எங்கே போனாலும் உன்னையும் உன்னுடைய கூட்டணி கட்சிகளையும் எதிர்ப்போம் தென்மாவட்டத்தில் நீ கால் வைக்கவே இயலாது, என்று தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.