தவறான செய்தியை பதிவிட்ட ஸ்டாலின்! உடனடியாக பதிவு நீக்கம்! தளபதியை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்.!!

0
66

தவறான செய்தியை பதிவிட்ட ஸ்டாலின்! உடனடியாக பதிவு நீக்கம்! தளபதியை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்.!!

கொரோனா பாதிப்பு தொடர்பாக தவறான தகவலை பதிவிட்ட ஸ்டாலினை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர். இதனால் அப்பதிவு உடனடியாக நீக்கப்பட்டது.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலக வல்லரசு நாடுகளையே பதம்பார்த்து வந்த கொரோனா தற்போது இந்தியாவையும் பாதித்து வருகிறது. இதனை எதிர்த்து மருத்துவ சிகிச்சை, ஊரடங்கு நடவடிக்கை மற்றும் பல்வேறு விழிப்புணர்கள் தினமும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த இக்கட்டான சூழலில் கொரோனாவின் தாக்கத்தை உணராமல் திமுக கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் கொரோனா பாதிப்பு பற்றிய தவறான தகவலை தனது டுவிட்டன பதிவு செய்திருந்தார். அந்த பதிவில் கூறியிருப்பதாவது;

தமிழகத்தில் மட்டும் கொரோனாவால் 9 பேர் உயிரிழப்பு மற்றும் 8000 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களை தனிமைபடுத்த மத்திய அரசு அறிவுறுத்தல் போன்றவை’ பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன.

இவ்வாறு தனது டுவிட்டரில் ஸ்டாலின் பதிவு செய்திருந்தார். அவர் பதிவு செய்தபோது தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் வெறும் 9 பேர் மட்டுமே உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. தமிழக எதிர்கட்சித் தலைவர் இதுபோன்று சரியான தகவலை உறுதிபடுத்தாமல் பொதுத் தளத்தில் பதிவு செய்யலாமா? இதுபோன்ற தவறான தகவலால் மக்களிடையே மேலும் அச்சம் தொற்றிக கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறி நெட்டிசன்கள் பலர் ஸ்டாலின் பதிவு குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்தனர்.

இதனையடுத்து அந்த பொய்யான தகவல் பதிவு டுவிட்டரில் இருந்து நீக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு பற்றிய உடனடி தகவல்களை அதிமுகவின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டரில் உண்மை தகவலுடன் பதிவேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

author avatar
Jayachandiran