ஸ்டாலினுக்கு கடவுள் ஆசிர்வாதம் இல்லை.. போற போக்கில் ஸ்டாலினை நாத்திகவாதி என சுட்டிகாட்டிய அண்ணாமலை! 

0
105
Stalin did not have God's blessings.. Annamalai pointed out that Stalin was an atheist!
Stalin did not have God's blessings.. Annamalai pointed out that Stalin was an atheist!

ஸ்டாலினுக்கு கடவுள் ஆசிர்வாதம் இல்லை.. போற போக்கில் ஸ்டாலினை நாத்திகவாதி என சுட்டிகாட்டிய அண்ணாமலை!

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பால் விலை வீட்டு வரி மின் கட்டண உயர்வு என விலையை உயர்த்தி அடுத்தடுத்து பல அதிர்ச்சிகளை மக்களுக்கு கொடுத்தது. இதனை பாமக கட்சி தலைவர் முதல் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அந்த வரிசையில் இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக முழுவதும் திமுக விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார். அந்த வகையில் ஈரோட்டில் நடைபெற்ற போராட்டத்தில் அண்ணாமலை பங்கேற்றார்.

அதில் பேசிய அவர், மத்திய அரசு பல பொருட்களின் விலையை குறைத்தாலும் மாநில அரசு அதனை குறைக்காமல் உள்ளது. குறிப்பாக தமிழகம் தான் எந்த ஒரு நிலையிலும் மாற்ற கொடுக்காமல் விலையை  மட்டும் உயர்த்தி வருகிறது. திமுக ஆட்சியை பிடித்தது முதல் மக்கள் விலைவாசியை மட்டுமே அனுபவித்து வருகின்றனர். அது மட்டும் இன்றி இந்தியாவிலேயே இவர் ஒருத்தரை தான் விளம்பர முதல்வர் என கூறுகின்றனர்.

இதனாலையே இவருக்கு விளம்பரம் மேனியா என்ற நோய் உருவாகியுள்ளது. எங்கு சென்றாலும் இவருக்கு பின்னால் பல கேமராக்களும் கூட்டிக் கொண்டு சென்று விடுகிறார். பருவமழையால் வீடுகள் வெள்ளத்தில் சூழ்ந்து மக்கள் கதறிக் கொண்டிருக்கும் நிலையில் இவர் தனது மனைவியுடன் லவ் டுடே படம் பார்த்துள்ளார். தற்பொழுது பாலின் விலையை உயர்த்தி பாமர மக்களின் அன்றாட பொருளைக் கூட வாங்கி பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளியும் விட்டது இந்த ஆட்சி என்று குற்றம்சாட்டினார்.

குஜராத்தில் அமுல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதில் வரும் லாபம் 82% அங்குள்ள விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. அங்கு வேண்டுமானால் தமிழக அமைச்சர் சென்று போய் பார்த்து கற்றுக் கொண்டு வரட்டும். அதற்கான செலவை கூட பாஜகவே ஏற்க தயாராக உள்ளது. முதலமைச்சருக்கு பிரதமராக வேண்டும் என்ற கனவு ஆசை அதிகளவில் உள்ளது. அவ்வாறு ஆசை உள்ளவர் வாரிசு அரசியல் நடத்தக்கூடாது. அதற்கென்று ஒரு தகுதி திறமை வேண்டும்.

ஒரு விதத்திற்கு மேலாக கடவுள் அருள் வேண்டும். அண்ணாமலை கடவுள் அருள் என்று கூறி இவர்கள் பெரியாரிஸ்ட் என்று சொல்லாமல் சொல்லி உள்ளார்.இதனையெல்லாம் பார்க்கும் பொழுது தமிழக மக்கள் மீது பெரிய அளவில் நம்பிக்கை உள்ளது. ஒவ்வொருவரும் பிரதமர் மோடியாக தங்களை நினைத்துக் கொண்டால் கட்டாயம் வெற்றி பெறலாம். தற்பொழுது அதற்கான நேரமும் வந்துவிட்டது தமிழகம் மிகப்பெரிய மாற்றத்தை காணப்போகிறது என்று கூறினார்.