எல்லாம் முடிய போகுது! சீக்கிரம் கூப்பிடுங்க அவங்கள!

0
64

வடகிழக்கு பருவமழை ஆரம்பித்து இருப்பதால் பேரிடர் மீட்பு படை அழைத்து போர்க்கால அடிப்படையில் சென்னை காக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கின்றார்.

இதுபற்றி அவர் தன்னுடைய வலைதளப் பக்கத்தில், மீண்டும் ஒரு டிசம்பர் 15 அபாயம் வந்துவிடுமோ என்று மக்கள் பயப்படும் அளவிற்கு ஒரு நாள் மழைக்கே சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது.

வடகிழக்கு பருவமழை ஆரம்பித்து இருக்கிறது என்று முன்கூட்டியே வானிலை ஆய்வு மையம் தெரிவித்தும் அதை காதில் வாங்கிக் கொள்ளாத தமிழக அரசு மெத்தனமாக செயல்படுகிறது எனவும், முன்னேற்பாடுகள் எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்க்கும் சென்னை மாநகராட்சியையும் , வன்மையாக கண்டிக்கிறது திமுக என்று தெரிவித்திருக்கின்றார்..

தங்கள் அரசு செய்யும் ஊழலில் மட்டுமே கவனம் செலுத்தும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் அலட்சியமே இந்த அவலத்திற்கு காரணம் பருவமழை காரணமாக அதற்க்கான மேம்பாட்டு திட்டத்திற்க்காக 750 கோடி ஒரு ரூபாய்க்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்தும், இதுவரை இல்லாத அளவிற்கு ஊழல் முறைகேடுகள் நடந்திருக்கின்றன.

கொரோனா தொற்றோ அல்லது 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் கனமழை என எந்த ஒரு இயற்கைப் பேரிடரையும் எதிர்கொண்டு மக்களை காப்பாற்றும் தைரியமும், துணிச்சலும், எடப்பாடி அரசிற்கு இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

உள்ளாட்சி தேர்தலை நடத்தி இருந்தால், அந்தந்த பகுதிக்கு இருக்கும் கவுன்சிலர்கள் களத்தில் இருந்து குறைகளை சரி செய்து இருப்பார்கள். ஆனால் அதிமுக அரசால் அது கூட முடியவில்லை எனில் பேரிடர் மீட்பு தடையை கூப்பிட்டாவது போர்க்கால அடிப்படையில் சென்னையை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பதிவில் தெரிவித்திருக்கின்றார்.