நேற்று தொடங்கிய எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு! அதிர்ச்சியில் கல்வி அதிகாரிகள்!!

0
83

நேற்று தொடங்கிய எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு! அதிர்ச்சியில் கல்வி அதிகாரிகள்!!

கர்நாடக மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இந்நிலையில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையின் காரணமாக அங்கு அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்காக தேர்வு மையங்களை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் கர்நாடக மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

கர்நாடக மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மதம் சார்ந்த ஆடைகளை அணிய கர்நாடக அரசு விதித்த தடையை உறுதி செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே தேர்வு எழுத வரும் மாணவ, மாணவிகள் சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும். இதை தவிர்த்து மதத்தை வெளிப்படுத்தக்கூடிய ஆடைகளை அணிந்து வர அனுமதி கிடையாது என தெரிவித்தார்.

எனவே மாணவிகள் பள்ளி வளாகத்திற்குள் ஹிஜாப் அணிந்து வரலாம். ஆனால் வகுப்பிற்குள் வரும்போது ஹிஜாப் அணிய அனுமதி கிடையாது என கூறினார். மேலும், இதுகுறித்த அறிவிப்பை அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் நேற்று தொடங்கிய எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வை எழுத வந்த முஸ்லிம் மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்து வந்தனர். இருப்பினும் தேர்வு மையங்களுக்குள் ஹிஜாப்பை அணிந்து செல்லவில்லை. மேலும், ஹிஜாப் அணிந்து வந்த ஒருசில மாணவிகளுக்கு தேர்வு அறைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

இதனையடுத்து நேற்று நடந்த எஸ்.எஸ்.எல்.சி பொதுதேர்வில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை என கூறப்படுகிறது. இந்த தகவல் கல்வி அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
Parthipan K