தொடரும் மாணவ மாணவிகள் தற்கொலை சிக்கலில் பாரிவேந்தரின் SRM கல்லூரி

0

தொடரும் மாணவ மாணவிகள் தற்கொலை சிக்கலில் பாரிவேந்தரின் SRM கல்லூரி

சென்னை கட்டாங்களத்தூரில் செயல்பட்டு வரும் பாரிவேந்தருக்கு சொந்தமான எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மருத்துத் துறையில் 4 ஆம் ஆண்டு படித்த வந்த திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்த மாணவி அனுப்பிரியா என்பவர் 9-வது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது அந்த கல்லூரி மாணவர்களிடையேயும்,பெற்றோர்களிடையேயும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவியின் குடும்ப சூழ்நிலை காரணமாகவும் மனஅழுத்தத்தாலும் அவர் தற்கொலை செய்து கொண்டார். என்று கல்லூரி நிர்வாகத்தால் கூறப்பட்டது. இதையடுத்த அவரது பெற்றோர்களும், உறவினர்களும் தற்கொலை செய்து கொண்ட அனுப்பிரியாவின் உடலை வாங்கி சென்றனர்.

இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த  அனிரூத் என்ற மாணவரும் நேற்று தற்கோலை செய்து கொண்டது கல்லூரி மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனிரூத் மின்னணு பொறியியல் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. விடுதியில் தங்கி படித்து வந்த அவர் 2ஆவது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அனிரூத் உயிரிழந்தார். அனிருத் தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மறைமலைநகர் போலீசார், மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தொடர்ந்து அடுத்தடுத்த சில நாட்களில் கல்லூரி விடுதியில் மாணவியும், மாணவனும் தற்கொலை செய்து கொண்டதால் SRM கல்லூரியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. 

இந்நிலையில் மாணவன் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவர்களின் பெற்றோர்கள் கொடுக்கும் புகாரின் பேரில் போலீசார் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

Copy

Leave A Reply

Your email address will not be published.

WhatsApp chat