தினேஷ் கார்த்திக்குக்கு அணியில் இடம் கிடைக்குமா? தமிழக முன்னாள் வீரர் கருத்து

0
83

தினேஷ் கார்த்திக்குக்கு அணியில் இடம் கிடைக்குமா? தமிழக முன்னாள் வீரர் கருத்து

ஆசியக்கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றுள்ளார். அதனால் அவரை எந்த இடத்தில் இறக்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

2004 ஆம் ஆண்டே இந்திய அணிக்காக விளையாட தொடங்கினாலும், தினேஷ் கார்த்திக்கு தொடர்ந்தாற்போல வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதற்கு முக்கியக் காரணம் தோனி என்று சொல்லலாம். அவரின் வருகைக்குப் பின்னர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேவை இந்திய அணிக்கு ஏற்படவில்லை. இதனால் அணிக்குள் வருவதும் சில போட்டிகள் விளையாடுவதும் பின்னர் நீக்கப்படுவதும் என இருந்து வந்தார். ஒரு கட்டத்தில் வர்ணனையாளராக கூட செயல்பட்டார்.

2022 ஆம் ஆண்டில் ஒரு ஐபிஎல் தொடரின் மூலமாக, தினேஷ் கார்த்திக் அற்புதமான திருப்புமுனையைப் பெற்றுள்ளார். RCB அணிக்காக பின் வரிசையில் சிறப்பான பேட்டிங் செய்ததன் மூலம் மீண்டும் தேசிய அணிக்கு திரும்பினார். இதையடுத்து கிடைக்கும் வாய்ப்புகளில் சிறப்பாக விளையாடி டி 20 போட்டிகளில் தனக்கான இடத்தை உறுதி செய்துள்ளார்.

இந்நிலையில் தற்போது ஆசியக்கோப்பைக்கான இந்திய அணியில் அவர் இடம்பிடித்துள்ளார். இந்நிலையில் பின்வரிசையில் ஆடுவதற்கு ஜடேஜா, ஹர்திக் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் உள்ளதால், இதில் யாரை ஆடும் லெவனில் தேர்வு செய்வார்கள்,  எந்த இடத்தில் விளையாட வைப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான ஸ்ரீகாந்த் “தினேஷ் கார்த்திக் ரிசர்வ் வீரராகவே எடுத்திருக்கலாம்” எனக் கூறியுள்ளார். மேலும் “தினேஷை எந்த இடத்தில் இறக்கப் போகிறார்கள் என தெரியவில்லை. அவர் அணியில் இருந்தாலும், ஆடும் லெவனில் இருக்கமாட்டார் என்றே தோன்றுகிறது” எனக் கூறியுள்ளார்.