பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை! இந்தியாவிடம் மேலும் கடனுதவி!!

0
102

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை! இந்தியாவிடம் மேலும் கடனுதவி!!

இலங்கை தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால் அங்கு விலைவாசி கடுமையாக உயர்ந்து வருகிறது. அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை அந்நாட்டில் பல மடங்கு உயர்ந்துள்ளது. அந்நியச்செலாவணி பற்றாக்குறையால் இலங்கையில் எரிபொருள் இறக்குமதி உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் இறக்குமதியில் தட்டுப்பாடு நிலவுகிறது.

இதன் காரணமாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. பொருளாதார நெருக்கடியால் இலங்கை நிலக்கரி வாங்க முடியாத சூழலில் உள்ளது. இதனால் அங்கு பெரும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக அந்நாட்டில் தினமும் பல மணி நேர மின்வெட்டு அமலில் உள்ளது.

மேலும், கேஸ் சிலிண்டருக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே பல இடங்களில் பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக அங்கு தாள்கள் மற்றும் மை போன்றவற்றிற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே அந்நாட்டில் பள்ளிகளில் தற்போது நடைபெறுவதாக இருந்த தேர்வுகளை ஒத்திவைத்து அந்நாட்டு அரசு அறிவித்தது.

இந்நிலையில் தற்போது இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்தியா, சீனா உள்ளிட்ட பல உலக நாடுகளிடம் இலங்கை கடன் உதவி கேட்டு வருகிறது. இதனையடுத்து இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக சமீபத்தில் இந்திய அரசு இலங்கைக்கு ரூ.7,500 கோடி கடன் உதவி அளிப்பதாக அறிவித்தது.

இந்த நிலையில், அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதிக்காக மேலும் ஒரு பில்லியன் டாலர் கடன் உதவியை வழங்குமாறு இந்தியாவிடம் இலங்கை கேட்டுள்ளது.

author avatar
Parthipan K