தொழிலில் நஷ்டம் பிரபல நூற்பாலை தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை!

0
85

தொழிலில் நஷ்டம் பிரபல நூற்பாலை தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை.

தொழில் முடக்கம் காரணமாக பிரபல தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோவையை சேர்ந்த இவர் நஞ்சுண்டபுரம் பகுதியில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வசித்து வந்த இவரது பெயர் விஜயகுமார்.

43 வயதே ஆகிய இவர் கருமத்தம்பட்டியில் உள்ள  சக்தி ஸ்பின்னிங் மில் என்ற பெயரில் நூற்பாலை நடத்தி வந்துள்ளார்.

மேலும் பல கார் பந்தயங்களிலும் ஆர்வத்துடன் கலந்து வந்துள்ளார். கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பல விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களாகவே இவர் தொழில் நஷ்டத்தால் மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்தக் கொடூரக்  கொரோனா இவரை போன்ற தொழில் அதிபரையும் விட்டு வைக்கவில்லை.

இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி அவரது நூற்பாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.அந்த நூற்பாலையில் மேலாளரான எத்திராஜ் நூற்பாலையில் சென்று பார்த்த பொழுது தூக்கில் தொங்கியபடி சடலமாக இருந்துள்ளார்.

இதுகுறித்து எத்திராஜ் அவர்கள் விஜயபாஸ்கரின் குடும்பத்திற்கு தகவலை தெரிவித்துள்ளார். அதனை அடுத்து விஜயகுமாரின் மைத்துனன் சந்தோஷ் என்பவர் கருமத்தம்பட்டியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் விஜயகுமாரின் உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக ஆய்வு செய்யப்பட்டு பின் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பிரபல தொழில் அதிபர்களுக்கு இந்தவித நிலைமை என்றால் ஏழை எளிய மக்கள் எங்கு போய் நிற்பார்கள். கொரோனா அனைவரையும் மன அழுத்தத்திற்கு ஆளாக்கி தற்கொலைக்கு முயன்று வருகிறது.

author avatar
Kowsalya