மாவட்ட அளவில் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி! முதல்  பரிசே இத்தனை ஆயிரம் ரூபாயா?

0
121
Speech competition for students at the district level! Is the first prize so many thousand rupees?
Speech competition for students at the district level! Is the first prize so many thousand rupees?
மாவட்ட அளவில் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி! முதல்  பரிசே இத்தனை ஆயிரம் ரூபாயா?
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லுாரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இவ்வறிவிப்பின் படி 2022-2023ஆம் நிதியாண்டில் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 03.06.2022 அன்று பிறந்தநாளையொட்டி கல்லூரி மாணவர்களிடையே ஏற்கனவே பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி தேனி மாவட்டத்தில் 28.07.2022 ஆம் நாளன்று நடைபெறவுள்ளது.  தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பேச்சுப் போட்டி காலை 10.00 மணி முதல் நடத்தப்படவுள்ளது. இப்போட்டியில் தேனி மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்துக்கொள்ளலாம்.
பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் பள்ளி மாணவர்கள், அவர்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் உரிய படிவத்தில் பரிந்துரை பெற்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்ப வேண்டும். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரால்
முதற்கட்டமாக கீழ்நிலையில் போட்டிகள் நடத்தப்பட்டு அதனடிப்படையில் பரிந்துரைக்கப் பெறும் மாணவர்கள் மாவட்ட அளவிலான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் கலந்து
கொள்ளலாம். இப்போட்டிகள் தொடர்பில் கூடுதல் விவரங்கள் பெறுவதற்கு 04546
251030 / 9159668240 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000/-, இரண்டாம் பரிசு ரூ.3000/-,
மூன்றாம் பரிசு ரூ.2000/-, என்ற வகையிலும் பணப் பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. இது தவிர அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேரைத் தனியாகத்
தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்புப் பரிசாக ரூ.2000/- வீதம் வழங்கப்படவுள்ளது என
மாவட்ட ஆட்சித்தலைவர்  க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.