பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஸ்பெஷல் போக்குவரத்து – முதல்வர் ஸ்டாலின்!

0
92
Special transport for school and college students - Chief Minister Stalin!
Special transport for school and college students - Chief Minister Stalin!

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஸ்பெஷல் போக்குவரத்து – முதல்வர் ஸ்டாலின்!

இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் பெருநகர போக்குவரத்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வேலைக்கு செல்லும் மக்களை கருத்தில் கொண்டு வெவ்வேறு பயணங்களை மேற்கொள்ளும் அவர்களின் நேர விரயத்தை குறைக்க ஆலோசனை மேற்கொண்டனர். அதற்காக ஒரே பயணச்சீட்டு முறையை கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். அதாவது பேருந்து, புறநகர் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்பவர்கள் பயணச்சீட்டு வாங்க காத்திருக்க வேண்டி உள்ளது.

இதுவே இந்த மூன்றில் பயணம் செய்பவருக்கும் ஒரே பயணச்சீட்டு இருந்தால் காலதாமதம் ஏற்படாது. இது குறித்து இன்று மு க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இதில் முதல்வர் கூறியதாவது, சென்னையில் போக்குவரத்து நெரிசல் என்பது அனைவரும் தினம்தோறும் அனுபவித்து வரும் ஒன்றுதான். அந்த வகையில் மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது.அதற்கான சாலை விரிவுப்டத்துவதும் அவசியம். தற்பொழுது வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை தவறாமல் போக்குவரத்து துறையில் பயன்படுத்தலாம்.

மேலும் உலகம் தர வாய்ந்த போக்குவரத்து திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும். எந்த அளவிற்கு போக்குவரத்தில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறோமோ அந்த அளவிற்கு சாலைகளில் தனியார் வாகனங்கள் பயணம் செய்யும் எண்ணிக்கை குறையும். அதேபோல போக்குவரத்து நெரிசலையும் கட்டுப்படுத்தவும் முடியும். இந்த குழுவானது சிறப்பு மிக்க அமைப்புகளை இணைத்து திட்டமிட்டு உரித்த காலத்திற்குள் செயல்படுத்த வேண்டும்.

அவ்வாறு செயல்படுத்தும் பொழுது பள்ளி மாணவர் மாணவிகளை நினைவில் கொண்டு சிறப்பு வாய்ந்த பொதுப் போக்குவரத்தை அமல்படுத்த வேண்டும். ஏனென்றால் பள்ளி மாணவர்கள் போதுமான பேருந்து வசதி இன்றி படிகளில் தொங்கிய படி செல்கின்றனர்.அதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்யும் காலை மற்றும் மாலை நேரத்தை கணக்கில் கொண்டு பேருந்து செயல்பாட்டை கொண்டு வர வேண்டும். அவர்களுக்கு சிரமம் அளிக்காத வகையில் பொது போக்குவரத்தானது அமைய வேண்டும் என கூறியுள்ளார்.