மதுரையில் இருந்து இந்த இடத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! பயணிகள் உற்சாகம்!

0
135
Special trains run from Madurai to this place! Travelers excited!
Special trains run from Madurai to this place! Travelers excited!

மதுரையில் இருந்து இந்த இடத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! பயணிகள் உற்சாகம்!

கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் பெரிதும் பாதிப்படைந்தது.இந்நிலையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.

அதனால் போக்கு வரத்து சேவைகளும் மீண்டும் தொடங்கி உள்ளது.இந்நிலையில் அடுத்த ஆண்டு தை அமாவாசை அன்று முன்னோர்களுக்கு பித்ரு பூஜை செய்வது வழக்கம் தான்.இந்நிலையில் காசிக்கு சென்று முன்னோருக்கு பூஜை செய்வார்கள்.அதனால் மதுரையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

இந்த ரயில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் தேதி மதுரையில் இருந்து புறப்படும்.19 தேதி திரிவேணி சங்க மத்தில் புனித நீராடி, அலோபிதேவி சக்தி பீடம் தரிசனம் செய்யலாம்.அதனை தொடர்ந்து ஜனவரி 20ஆம் தேதி கங்கையில் புனித நீராடிய பிறகு காசி விசுவநாதர்,அன்னபூரணி ,விசாலாட்சி சக்தி பீடத்தை தரிசனம் செய்வார்கள்.

அதன் பிறகு மாலையில் ஆரத்தி நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு 21 ஆம் தேதி காலை முன்னோருக்கு பிண்ட பூஜை செய்து ,மங்கள கவுரி சக்தி பீடத்தை தரிசனம் செய்யலாம் என தெரிவித்துள்ளனர்.23 தேதி காமாக்யா தேவி சக்திபீட தரிசனம் ,25 ஆம் தேதி கொல்கத்தா காளிதேவி ,காளிகாட் ,பேளூர் மடம் ,தச்சினேசுவரர் தரிசனம் போன்றவைகளை முடித்து பிறகு மீண்டும் மதுரைக்கு ரயில் புறப்படும்.

மேலும் இதற்கு ரயில் கட்டணம் ,தங்குமிடம் ,உணவு ,உள்ளூர் பேருந்து வசதி ஒரு நபருக்கு ரூ21 ஆயிரத்து 500 கட்டணம் வசூல் செய்யப்படுகின்றது.இதற்கான பயண சீட்டு www.ularail.com என்ற  இணையதளத்தில் பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளனர்.

author avatar
Parthipan K