தைப்பூசம் , குடமுழுக்கை முன்னிட்டு பழநிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்..!

0
159

பழநி முருகன் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளில் ஒன்று பழநி. வருகின்ற பிப்ரவரி 5ம் தேதி தைசப்பூசம் கொண்டாடப்படுவதால் பழநியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். கூடுதல் சிறப்பாக பழநியில் கும்பாபிஷேக விழாவும் கொண்டாடப்படுகிறது. இதனால், பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என எதிர்பாக்கப்படுகிறது.

இதனால், மதுரை -பழனியில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாளை, நாளை மறுநாள் மற்றும் பிப்ரவரி 3, 4, 5 ஆகிய நாட்களில் இந்த ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள்மதுரையிலிருந்து காலை 10.00 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.30 மணிக்கு பழநியை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல பழநியில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படும் ரயில் மாலை 5 மணிக்கு மதுரை வந்து சேரும் எனவும் அந்த ரயில் சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் மார்கமாக செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பழநி பிரசாதத்தை வீட்டில் இருந்து பெற்றுகொள்ளும் முறையையும் அறிமுகப்படுத்தியுள்ளது.