விவசாயிகள் மீது கார் ஏற்றிய வழக்கு! அதிரடி காட்டிய சிறப்பு புலனாய்வு குழு! 

0
101
Special Investigation Team in Action! Son of a comfortable Union Minister!
Special Investigation Team in Action! Son of a comfortable Union Minister!

விவசாயிகள் மீது கார் ஏற்றிய வழக்கு! அதிரடி காட்டிய சிறப்பு புலனாய்வு குழு!

விவசாயிகள் ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வந்தனர்.அந்த வகையில் நாடு தழுவிய முழு கடைகள் அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஆந்திரா, பஞ்சாப் போன்ற மாநிலங்கள் முழு வீச்சில் ஈடுபட்டனர். இதனையடுத்து இச்சட்டத்தை எதிர்த்து உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.லக்கிம்பூர் கோரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும் இந்த போராட்டத்தில் முழுவீச்சுடன் பங்கேற்றனர். கிராமத்தில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் மாநில துணை முதல்வர் மந்திரி கேசவ பிரசாத் மவுரியா வருவதாக கூறியிருந்தனர்.

இவர் வருவதை எதிர்த்து அவரை தடுக்கும் விதமாக அருகில் இருக்கும் கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் திகுணியாவில் குவிந்தனர். அப்பொழுது அந்த கிராமத்தில் அவ்வழியே பாஜகவினரின் வாகனங்கள் அணிகளாக வந்தது. அவர் வந்த ஒரு கார் அங்குள்ள விவசாயிகள் மீது மோதியது. அதில் இரு விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆத்திரமடைந்த விவசாயிகள் பாஜக வந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதி முழுவதும் வன்முறையாக காட்சி அளித்தது.

வன்முறையில் நான்கு விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இவ்வாறு ஒன்றிய அரசின் அராஜகத்தால் உயிர்களை இழந்த விவசாயிகளை கண்டு உத்தர பிரதேச மக்கள் பெரும் சோகத்தில் இருந்தனர்.அதனையடுத்து வன்முறையால் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களை காண பிரியங்கா காந்தி சென்றார். அப்போது அவரை ஊருக்குள் நுழையவிடாமல் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.அதனையடுத்து அந்த கார் விவசாயிகள் மீது மோதிய வீடியோ வெளியானது. அதில் ஒன்றிய அமைச்சரின் மகன், ஆதரவாளர்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அதனையடுத்து ஆதரவாளர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

விவசாயிகள் உயிரிழந்து நான்கு நாட்களுக்கு பிறகு இந்த இருவரை போலீசார் கைது கைது செய்தனர்.மேலும் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிக் மீரா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது .ஆனால் இவர் மத்திய அமைச்சரின் மகனாக இருப்பதால் கைது செய்யப்படவில்லை. மேலும் மத்திய இணை அமைச்சரின் மகன் ஆஷிஷ்ஸ் மிஸ்ரா தற்போது தலைமறைவாக இருந்து தனிப்படை தேடி வந்தது. பிறகு அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அதனையடுத்து விவசாயிகள் மீது கார் கார் ஏற்றி கொலை செய்தது குறித்து சிறப்பு புலனாய்வு அமைக்கப்பட்டது. இந்த புலனாய்வு விசாரணையானது மூன்று மாத காலமாக நடைபெற்று வந்தது. இந்த விசாரணையின் முடிவில் 5000 குற்றப் பத்திரிகைகளை நீதிமன்றத்தில் தற்பொழுது தாக்கல் செய்துள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியாக மத்திய இணை அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா என கூறியுள்ளனர்.ஆஷிஷ் மிஸ்ராவை தவிர்த்து மேலும் 13 பேர் குற்றவாளி என புலனாய்வு விசாரணையில் கூறியுள்ளனர்.