சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கம்! எந்தந்த ஊர்களுக்கு தெரியுமா!

0
107
Special fare trains running! Do you know which towns?
Special fare trains running! Do you know which towns?

சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கம்! எந்தந்த ஊர்களுக்கு தெரியுமா!

தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் மைசூர் தூத்துக்குடி இடையே சிறப்பு கட்டண ரயில் இயக்க தென்மேற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது அந்த வகையில் மைசூர் தூத்துக்குடி சிறப்பு கட்டண ரயில் வரும் நவம்பர் 4,11,18 ஆகிய தேதிகளில் வெள்ளிக்கிழமைகளில் மைசூரில் இருந்து மதியம் 12.05 மணிக்கு புறப்படும் மறுநாள் அதிகாலை ஐந்து மணிக்கு தூத்துக்குடியை வந்தடையும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் மறுமார்க்கத்தில் தூத்துக்குடியில் இருந்து  மைசூர் வண்டி எண் (06254) என்ற  சிறப்பு கட்டண ரயில் நவம்பர் 5,12,19 ஆகிய தேதிகளில் சனிக்கிழமைகளில் மாலை மூன்று மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு மைசூர் வந்தடையும்.

அதனையடுத்து இந்த ரயில்கள் யெலியூர் ,மாண்டியா,பெங்களூர் ,பெங்களூர் கண்டோன்மென்ட் ,ஓசூர்,தர்மபுரி ,சேலம் ,நாமக்கல் ,கரூர்,திண்டுக்கல் ,மதுரை ,கோவில்பட்டி ,விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த சிறப்பு கட்டண ரயில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி,மூன்று குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள்,10 பெட்டிகளில் இரண்டு வகுப்பு படுக்கை வசதி, மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகள் இணைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K