Connect with us

Breaking News

ஜனவரி மாதத்தில் சிறப்பு கட்டண ரயில் இயக்கம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!

Published

on

Special fare train operation in January! Southern Railway announced!

ஜனவரி மாதத்தில் சிறப்பு கட்டண ரயில் இயக்கம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!

நேற்று தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது அந்த அறிவிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் கேரளாவிற்கு சிறப்பு கட்டண ரயில்கள் ஜனவரி 12 ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது.

Advertisement

மேலும் தாம்பரத்தில் இருந்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் தேதி இரவு 9 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் வண்டி எண் 06021 அடுத்த நாள் காலை 9 மணியளவில் திருநெல்வேலி சென்றடையும். அதனையடுத்து மறுமார்க்கமாக திருநெல்வேலியிலிருந்து ஜனவரி 13 ஆம் தேதி பகல் 1 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் வண்டி எண் 06022 மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.

மேலும் இந்த ரயில் செங்கல்பட்டு,விழுப்புரம்,விருத்தாசலம், திருச்சி, புதுக்கோட்டை,காரைக்குடி,சிவகங்கை,மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர்,கோவில்பட்டி,சாத்தூர் ஆகிய பகுதி வழியாக இயக்கப்படும். தாம்பரத்தில் இருந்து ஜனவரி 13 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு புறப்படும் அதிவிரைவு வண்டி எண் 06041 என்ற சிறப்பு ரயில் மறுநாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவில் வந்தடையும்.

Advertisement

மறுமார்க்கமாக நாகர்கோவில் இருந்து ஜனவரி 16 ஆம் தேதி மாலை 5.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 7.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.தாம்பரத்தில் இருந்து ஜனவரி 16  ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06057 என்ற சிறப்பு ரயில் காலை 9 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும்.மறுமார்க்கமாக திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 17  ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

இந்த ரயிலானது செங்கல்பட்டு,விழுப்புரம்,விருத்தாசலம்,திருச்சி,திண்டுக்கல், மதுரை,விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி,திருநெல்வேலி,வள்ளியூர் வழியாக இயக்கப்படும்.கேரளத்தின் கொச்சுவேலியிலிருந்து ஜனவரி 17 ஆம் தேதி காலை 11.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 6.20 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து  ஜனவரி 18 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் கேரளத்தின் கொச்சுவேலிக்கு காலை 3.20 மணிக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கேரளத்தின் எர்ணாகுளத்திலிருந்து ஜனவரி 12 ஆம் தேதி இரவு 11.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 11.30  மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்.இந்த ரயில் தமிழகத்தின் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை,காட்பாடி வழியாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement