பொங்கல் பண்டிகை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள்! தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

0
101

எதிர்வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்துத்துறை செய்யும் சிறப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடர்பான ஆலோசனை கூட்டம் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றதாக தெரிகிறது.

தீபாவளி, பொங்கல், உள்ளிட்ட பண்டிகை காலங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பணி நிமித்தம் காரணமாக, சென்னையில் தங்கியிருப்போர் அந்த பண்டிகை காலங்களில் தங்களுடைய சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்கு வசதியாக வருடம்தோறும் தமிழக அரசின் சார்பாக சில சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்பது வழக்கமான ஒன்றுதான்.

தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து பகுதிகளுக்கும் தலைநகர் சென்னையில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். இந்த பண்டிகை காலங்களில் மட்டும் கூடுதலான பேருந்துகளை இயக்குவதற்கு மாநில அரசு அனைத்து விதமான ஏற்பாடுகளையும் செய்யும் என்பது அனைவரும் அறிந்ததுதான்.

அந்தவிதத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் போக்குவரத்து துறை செயலாளர் கோபால், ஆணையர் நடராஜன் மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றதாக சொல்லப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து துறை சார்பாக செய்யப்படும் சிறப்பு ஏற்பாடுகள் தொடர்பாக அமைச்சர் ராஜகண்ணப்பன் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதம் 11ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரையில் சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய2100 பேருந்துகளுடன் 4000 சிறப்பு பேருந்துகள் என்று மூன்று நாட்களுக்கும் ஒன்றாக சேர்ந்து ஒட்டு மொத்தமாக 10 ஆயிரத்து 300 பேருந்துகளு,ம் மற்ற ஊர்களிலிருந்து இந்த மூன்று நாட்களுக்கு 61468 சிறப்பு பேருந்துகள் என்று ஒட்டுமொத்தமாக 16 ஆயிரத்து 768 பேருந்துகள் இயக்கப்படும் என கூறியிருக்கிறார்.

பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு மற்ற ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளுக்காக ஜனவரி மாதம் 16ம் தேதியிலிருந்து 18ஆம் தேதி வரையில் தினசரி இயங்கக்கூடிய 2,100 பேருந்துகள் உடன் 3797 சிறப்பு பேருந்துகளும், மற்ற முக்கிய பகுதிகளில் இருந்து 6212 பேருந்துகளும் என்று ஒட்டுமொத்தமாக 16209 பேருந்துகள் இயக்கப்படும். அதன் அடிப்படையில் பொங்கல் பண்டிகைக்காக ஒட்டு மொத்தமாக 33 ஆயிரத்து 477 பேருந்துகள் இயக்கப்படும் என சொல்லப்பட்டிருக்கிறது.

ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரையில் சென்னையில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளின் விபரம் வருமாறு, மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செங்குன்றம் மார்க்கமாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் ஆந்திர மாநிலத்துக்கு பேருந்துகள் செல்லும். அதேபோல கேகே நகர் மாநகர போக்குவரத்து பேருந்து நிலையத்தில் இருந்து ஈசிஆர் சாலை மூலமாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் வழியாக பேருந்துகள் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம், விக்ரவாண்டி, பண்ருட்டி, மூலமாக கும்பகோணம் மற்றும் தஞ்சாவூருக்கு பேருந்துகள் செல்லும். தாம்பரம் ரயில் நிலையத்தில் இருக்ககூடிய பஸ் நிலையத்தில் இருந்து திண்டிவனம் மூலமாக திருவண்ணாமலை மற்றும் போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி செஞ்சி வழியாகச் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் மற்றும் திண்டிவனம் மார்க்கமாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரத்திற்கு பேருந்துகள் இயக்கப்படும்.

பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், செய்யாறு, காஞ்சிபுரம், ஓசூர், தர்மபுரி, திருத்தணி, கிருஷ்ணகிரி, உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மேலே குறிப்பிடப்பட்டு இருக்கின்ற பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளுக்கு அதாவது மயிலாடுதுறை, வேளாங்கண்ணி, நாகை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, செங்கோட்டை, திருச்செந்தூர், தூத்துக்குடி, நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், காரைக்குடி, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ராமநாதபுரம்,கோவை, சேலம், எர்ணாகுளம், திருவனந்தபுரம் மற்றும் பெங்களூருக்கு பேருந்துகள் இயக்கப்படும்.

முன்பதிவு செய்யப்பட்டிருக்கின்ற பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து கிளம்பி பூந்தமல்லி, நசரத்பேட்டை, வெளிச்சுற்று சாலை வழியாக வண்டலூர் சென்றடைந்து ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு சென்று தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரில் இருந்து பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றுவதற்காக வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது.

கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் முன்பதிவு மையங்கள் செயல்படும் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்துகொள்ள நடைமுறையில் இருக்கின்ற இணையதள வசதிகளான www.tnstc.in,tnstc official app,www.redbus.in, உள்ளிட்ட இணையதளங்கள் மூலமாகவும், முன்பதிவு செய்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டிருக்கிறது.

கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக தாம்பரம், பெருங்களத்தூர், வழியாக செல்வதை தவிர்த்து திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு, வழியாக செல்லலாம் என்று சொல்லப்படுகிறது.

பொங்கலுக்கு பிறகு ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரையில் 16209 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்துகளின் இயக்கம் தொடர்பாக அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் தொடர்பாக புகார் தெரிவிக்கும், உதவிக்கும், தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அந்த எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் அதற்கும் தனிப்பட்ட கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி முக கவசம் அணிந்து பாதுகாப்பான முறையில் பயணம் செய்ய வேண்டும். பொதுமக்களின் வசதிக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மேலே கூறப்பட்ட இருக்கின்ற 4 பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக இணைப்பு பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியிருக்கிறார்.