செவ்வாய் கிரகத்தில் ஸ்பேஸ் ஹெலிகாப்டர் – நாசாவின் புது முயற்சி!

0
178

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, ஏழு மாதங்களுக்கு முன்பு பெர்சிவரன்ஸ் என்கின்ற விண்கலத்தை விண்ணில் பாய்ச்சி உள்ளது. இந்த விண்கலம் செவ்வாய் கோளை முழுமையாக ஆராய்ச்சி செய்யும் நோக்கத்தோடு அனுப்பப்பட்டதாகவும்.

பாராசூட் வாயிலாக ‘பெர்சிவரன்ஸ்’ விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு ஜெஸ்சீரோ கிரேட்டர் என்கின்ற பள்ளத்தை ஆராய்ச்சி செய்ய உள்ளது. இச்சூழ்நிலையில் விண்வெளி ஆராய்ச்சிகளின் வரலாற்றில் இல்லாதவகையில், முதல்முறையாக செவ்வாய் கிரகத்தில் ஸ்பேஸ் ஹெலிகாப்டரை பறக்க விடுவதற்கு நாசா ஏற்பாடு செய்துள்ளது.

ஆம். ஒரு கிலோ 80 கிராம் எடை மட்டுமே கொண்ட Ingenuity என்றழைக்கப்படும் ஒரு சிறிய ஸ்பேஸ் ஹெலிகாப்டரை செவ்வாய்க் கோளில் பறக்கவிட திட்டமிட்டுள்ளது. இந்த Ingenuity ஹெலிகாப்டர், பூமியில் சாதாரணமாக பறக்கக்கூடிய இறக்கைகள் கொண்ட ஹெலிகாப்டர்களை விட இந்த ஹெலிகாப்டர் எட்டு மடங்கு அதிவேகமாக பறக்குமாம்.

அத்துடன் இந்த ஹெலிகாப்டர் ஒரு நிமிடத்திற்கு 2400 முறை, அதுவும் எதிரெதிர் திசைகளில் சுழல்கின்ற தன்மை உடையது. மேலும் நான்கு கார்பன்-ஃபைபர் பிளேடுகளுடன் பறந்து செல்லக்கூடியதாம். இந்த ஹெலிகாப்டர், பெர்சிவரன்சுடன் சேர்ந்து ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ள உள்ளதாம். இந்த முயற்சியின் மூலம், விண்ணுலகின் அளவிட முடியாத தகவல்கள் கிடைக்கப் பெறலாம் என்று நாசா விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

author avatar
Parthipan K