ரயில் டிக்கெட் புக் செய்ய முடியாதவர்களுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு

0
95

ரயில் டிக்கெட் புக் செய்ய முடியாதவர்களுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு

பொதுமக்களின் வசதிக்காக 41 ரயில்களில் கூடுதலாக இரண்டு முன்பதிவு செய்யாத பெட்டிகள் இணைத்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளை இணைக்கும் முறை ரத்து செய்யப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்து மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் பண்டிகை காலமும் நெருங்கி வருவதால் மக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தெற்கு ரயில்வே நிர்வாகம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் ரயில்களில் கொரோனா காலத்திற்கு முன்பிருந்த முன்பதிவு இல்லாத பெட்டிகளை மீண்டும் ரயில்களில் இணைக்கும் பயன்பாட்டை நடைமுறையில் கொண்டு வர ரயில்வே நிர்வாகம் முன்வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அதன்படி முதல்கட்டமாக நாளை முதல் 39 ரயில்களிலும், அதனையடுத்து வருகிற 4-ந் தேதி முதல் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயிலிலும் என மொத்தம் 41 ரயில்களில் இது பயன்பாட்டிற்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளது. அந்த வகையில் நாளை முதல்  திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி, திருவனந்தபுரம்-திருச்சி இன்டர்சிட்டி ஆகிய   ரயில்களில் தலா 2 பெட்டிகள் முன்பதிவு இல்லாத பெட்டிகளாக பயன்பாட்டில் இருக்கும் என தெரிவித்துள்ளது.

அதனையடுத்து மங்களூர்-நாகர்கோவில் பரசுராம் எக்ஸ்பிரஸ் மற்றும் நாகர்கோவில்-மங்களூர் பரசுராம் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில் வருகிற 4-ந் தேதி முதல் கூடுதலாக 2 பெட்டிகள் முன்பதிவு இல்லாத பெட்டிகளாக இணைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அந்த வகையில் அடுத்தடுத்த நாட்களில் இந்த நடைமுறை அனைத்து ரயில்களிலும் பயன்பாடிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Parthipan K