Connect with us

Breaking News

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இந்த இரண்டு தேதிகளில் இங்கு ரயில் சேவை மாற்றம்!

Published

on

Southern Railway announced! Train service change here on these two dates!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இந்த இரண்டு தேதிகளில் இங்கு ரயில் சேவை மாற்றம்!

நேற்று தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது அந்த அறிவிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் பேருந்து,ரயில் போன்றவைகளில் பயணம் செய்வதன் மூலமாக தொற்று வைரஸ் வேகமாக பரவும் நிலை இருகின்றது என சுகாதாரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

Advertisement

அதனால் போக்குவரத்து கழகத்தின் உத்தரவின் படி அனைத்து இடங்களுக்கும் போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டது.இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும் வருகின்றனர்.

மேலும் கடந்த ஆண்டு முதலே போக்குவரத்து சேவைகள் அனைத்தும் தொடங்கியது.கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகை,டிசம்பர் கிறிஸ்துமஸ் பண்டிகை,இம்மாதம் பொங்கல் பண்டிகை என அனைத்திற்கும் அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தற்போது திருவனந்தபுரம் கோட்டத்தில் பாரமரிப்பு பணி மேற்கொள்ளபடுகின்றது அதன் காரணமாக குருவாயூர் விரவு ரயில் சேவையில் ஜனவரி 21மற்றும் 28 ஆகிய தேதிகளில் ரயில் சேவை மாற்றம் செய்யப்படவுள்ளது.அந்த வகையில் சென்னை எழும்பூரிலிருந்து தினந்தோறும் காலை ஒன்பது மணிக்கு புறப்படும் குருவாயூர் விரைவு ரயில் வண்டி எண் 16127 மறுநாள் காலை 6.40 மணிக்கு கேரளத்தின் குருவாயூர் சென்றடையும்.

அதனை தொடர்ந்து திருவனந்தபுரம் கோட்டத்துக்குள்பட்ட பகுதியில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதன் காரணமாக ஜனவரி 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கேரளத்தின் சாலக்குடி குருவாயூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.மேலும் இந்த இரண்டு தேதிகளில் சென்னை எழும்பூர் முதல் சாலக்குடி வரை மட்டும் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement