தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இன்று முதல் அமலுக்கு வரும் புதிய நடைமேடை கட்டணம்!

0
93
Southern Railway announced! Platform Fee Effective Today!
Southern Railway announced! Platform Fee Effective Today!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இன்று முதல் அமலுக்கு வரும் புதிய நடைமேடை கட்டணம்!

அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இருந்தே பண்டிகை நாட்களாக இருகின்றது அதனால் மக்கள் அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் அதனால் தமிழக அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் ஆம்னி டிக்கெட்டுகள் உயர்த்தப்பட்டுள்ளது.இந்நிலையில் தற்போது தெற்கு ரெயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் விழாக்காலங்களில்  கூட்டத்தை தவிர்க்கும் வகையில் சென்னை சென்ட்ரல் ,எழும்பூர் உள்ளிட்ட எட்டு ரெயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.மேலும் அந்த வகையில் சென்னை சென்ட்ரல் ,எழும்பூர் ,தாம்பரம் ,காட்பாடி ,செங்கல்பட்டு ,அரக்கோணம் ,திருவள்ளூர் ,ஆவடி ஆகிய எட்டு ரெயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

ரெயில் நிலையங்களின் நடைமேடை கட்டணம் ரூ 10 ல்லிருந்து ரூ20 ஆக உயர்ந்துள்ளது.இந்த கட்டண உயர்வானது வருகிற 2023 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி வரை இவை நடைமுறையில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K