தமிழக அரசால் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகப்பில் வருகிறது புதிய மாற்றம்! முதலமைச்சர் அதிரடி திட்டம்!

0
131

2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொருட்கள் வழங்காமல், ரொக்கமாக வழங்க தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

தமிழர் திருநாளாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எல்லா அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு தமிழ்நாடு அரசின் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.

2022 ஆம் ஆண்டு சுமார் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்த இந்த திட்டத்தை அனைத்து நியாய விலை கடைகளின் மூலமாக, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயல்படுத்தியது.

இந்த நிலையில், 2022 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பில் குளறுபடிகள் அதிகமாக நடந்ததாக எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்தனர். இது சமூக வலைதளங்களிலும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது.

அரசின் சார்பாக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற குளறுபடி காரணமாக, அரசுக்கு மிகப்பெரிய அவப்பெயர் ஏற்பட்டது. அதனை கருத்தில் கொண்டு தற்போது வரும் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகப்பு வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் அவ்வப்போது ஆலோசனை செய்து வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது.

அதனடிப்படையில் இந்த முறை எந்த பரிசுப் பொருளும் வழங்காமல் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் ரொக்கமாக கொடுப்பதற்கு முடிவு செய்து இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. மிக விரைவில் இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here