மீண்டும் ரிஸ்க் எடுக்கும் சூரி… பிரபல இயக்குனர் படத்தில் ஹீரோ அவதாரம்!

0
129

மீண்டும் ரிஸ்க் எடுக்கும் சூரி… பிரபல இயக்குனர் படத்தில் ஹீரோ அவதாரம்!

நடிகர் சூரி கதாநாயகனாக வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் சூரி தமிழ் சினிமாவில் பல படங்களில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்து வந்த நிலையில் வெண்ணிலா கபடிக்குழு திரைப்படம் மூலமாக கவனம் பெற்றார். அதன் பின்னர் பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். இப்போது ரஜினி, அஜித், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து அதிக சம்பளம் பெறும் நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.

இந்நிலையில் அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்துக்காக நகைச்சுவை நடிகராக நடிக்க இருந்த பல படங்களை இழந்தார். ஆனால் இன்னும் விடுதலை திரைப்படம் முடியவில்லை. இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டு வருகிறது. எப்போது ரிலீஸ் ஆகும் என்றும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் சூரி இப்போது மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளாராம். மதயானைக் கூட்டம் படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாருக்காக உருவாக்கப்படுகிறதாம். இதற்கிடையில் சூரி நகைச்சுவை நடிகராக இல்லாமல் முக்கியக் கதாபாத்திரத்தில் இயக்குனர் ராம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நிவின் பாலி கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.