“Son of MLA” காரில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்:! கலாய்த்துதள்ளும் நெட்டிசன்கள்! வைரல் புகைப்படம்!

0
75

பொதுவாகவே அரசியல்வாதிகளும் பிரபலங்களும் சமூகத்தில் தனியாகத்தான் தெரிவர்.அதிலும் குறிப்பாக அரசியல்வாதிகள் பதவியில் இருந்தாலும் இல்லையென்றாலும் அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் கவனிப்பே தனியாகத்தான் இருக்கும்.

இந்நிலையில் ஒரு முக்கிய நெடுஞ்சாலையில் சென்ற ஒரு காரில் பின்புறக் கண்ணாடியில் ஒருவர் சன் ஆப் எம்.எல்.ஏ (son of MLA) என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ள ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.

அந்தக் காரின் புகைப்படம் தற்போது சமூகவலை
தளங்களில் வைரலாகி வருகின்றது. மேலும் இந்தப் புகைப்படத்திற்கு மேல் இதுதான் இதுதான் நமது கலாச்சாரம் என்று அந்த அரசியல்வாதி மகனை கலாய்ப்பது போல் எடிட் செய்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

author avatar
Pavithra