பிரீ பையர் விளையாடுவதற்கு தந்தை செல்போன் தராததால் கோபித்து சென்ற மகன்

0
132
#image_title

பிரீ பையர் விளையாடுவதற்கு தந்தை செல்போன் தராததால் கோபித்து சென்ற மகன்

குரோம்பேட்டை அருகே 14-வயது சிறுவனுக்கு தந்தை பிரீ பையர் விளையாடுவதற்கு செல்போன் தராததால் அப்பாவிடம் கோபித்துக் கொண்டு சென்றசம்பவம் நடைபெற்றுள்ளது.

வாக்கி டாக்கி மூலமாக தீவிர தேடும் வேட்டை ஈடுபட்ட போலீசார் எட்டு மணி நேரத்தில் சானடோரியம் பச்சை மலை அருகே சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

சென்னை தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை லட்சுமிபுரம் பகுதியில் வசித்து வருபவர் வீராசாமி இவரது ஒரே மகனான 14-வயதுடைய திவாகர் இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகின்றார்.

இந்த நிலையில் கடந்த ஒரு வருட காலமாக பிரீ பையர் என்று சொல்லக்கூடிய கேம் ஒன்றுக்கு அடிமையாகி உள்ள நிலையில் கேம் மட்டுமே உலகம் என எண்ணியதால் சரிவரப் பள்ளிக்கு செல்லாமலும் அப்பாவின் மொபைல் மூலமாக பிரீ பையர் கேம் தொடர்ந்து விளையாடி வந்துள்ளார்.

நேற்று காலை பிரீ பையர் கேம் விளையாட செல்போனை அப்பாவிடம் கேட்ட போது அதற்கு அப்பா செல்போன் எல்லாம் தர முடியாது சரியாக படிக்குமாறு கூறி அறிவுரை சொன்னதும் வீட்டில் இருந்து யாரிடம் சொல்லாமல் அங்கிருந்து சென்றுள்ளார். தன் மகனை காணவில்லை என பல இடங்களுக்கு தேடியும் மகன் கிடைக்கிறதால் குரோம்பேட்டை காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளித்துள்ளார்.

புகார் அடிப்படையில் உடனே வாக்கி டாக்கி மூலமாக தாம்பரம் மாநகரா காவல் உள்ள அனைத்து காவல் நிலையத்திற்கும் 14 வயது சிறுவனின் அங்க அடையாளங்களை தெரிவித்து சிறுவனை காணவில்லை என தெரிவித்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து தீவிரமாக தேடி வந்த நிலையில் சானடோரியம் பச்சைமலையில் இருப்பது போலீசாருக்கு தெரிவந்தது. அதன் பிறகு சிறுவனை மீட்டு சிறுவனை காவல் நிலையம் அழைத்து சென்று சிறுவனின் பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.

கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் மகனை சரிவர கவனிக்க முடியாதால் பெற்றோரின் அரவணைப்பின்றி வளர்ந்து வருவதால் செல்போன் பிரீ பையர் கேம்முக்கு அடிமையாகி உள்ளது தெரிய வந்தது.

அதன் பிறகு போலீசார் பெற்றோரிடம் உங்கள் மகனை பாசத்தோடு பார்த்துக் கொண்டால் மொபைல் கேம்களுக்கு சிறுவர்கள் அடிமையாக மாட்டார் என பெற்றோருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

author avatar
Savitha