சமூக வலைதளங்களுக்கு இனி புதிய கட்டுப்பாடா.?! விரைவில் அமலாகவுள்ள புதிய விதிமுறை!

0
89

.சமூக வலைதளங்களுக்கு இனி புதிய கட்டுப்பாடா.?! விரைவில் அமலாகவுள்ள புதிய விதிமுறை!

சமூக வலைதளங்களை பயன்படுத்திவதற்கான வயது வரம்பை நிர்ணயிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனு சம்பந்தமாக மத்திய அரசுக்கு விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தனர். அந்த மனுவில் சமூக வளைதளங்களை ஒரு விளம்பர தளமாக பலரும் மாற்றி அமைத்து வருகிறார்கள். தகாத படங்கள் மற்றும் காணொளிகளை தொடர்ச்சியாக வெளியீடு செய்து வருகிறார்கள்.

எனவே, சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கான வயது வரம்பை அரசு நிர்ணயிக்க உத்தரவிட வேண்டும். ஏனென்றால், இந்த சமூக வலைதளங்களால் பள்ளியில் படிக்கும் சிறுவயது மாணவ, மாணவியரிடம் இந்த சமூக வலைத்தளங்கள் காரணமாக அனேக தீய பழக்கங்கள் உண்டாகி வருவதால், அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது.

ஆகவே, அவற்றை பயன்படுத்துவதற்கான வயது வரம்பை நிர்ணயிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு இது தொடர்பாக விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.