ரேஷன் கடையில் நிவாரண பொருட்களை தொடாமல் வழங்க சூப்பர் ஐடியா : வைரலாகும் வீடியோ! குவியும் பாராட்டு!

ரேஷன் கடையில் நிவாரண பொருட்களை தொடாமல் வழங்க சூப்பர் ஐடியா : வைரலாகும் வீடியோ! குவியும் பாராட்டு!

உலகமே கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்கள் நாட்டு மக்களை பாதுகாக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த பாரத பிரதமர் மோடி யாரும் வெளியில் வரவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார்.

இந்த அதிரடி உத்தரவால் காவல்துறை வெளியில் வருபவர்களிடம் கண்டிப்பு காட்டி வந்தது, இதனால் நாடு முழுவதும் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் வெளியே வரவேண்டாம் என்று தமிழக முதல்வரால் அறிவுறுத்தப்பட்டது.

இதற்கிடையில் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 1000 ரூபாய் நிவாரண தொகையையும் விலையில்லா நிவாரண பொருட்களையும் பெற்றுக் கொள்ளலாம் என்று முதல்வர் அறிவித்து இருந்தார். இதனால் நேற்றே(ஏப் – 1) ரேஷன் கடைகளில் 1 மீட்டர் இடைவெளி விட்டு கோடுகளை போட்டு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் செய்து வைத்தனர்.

இந்த நிலையில் டோக்கன்கள் வழங்கப்பட்டு வெவ்வேறு பகுதி மக்களையும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் வர வைத்து நிவாரண பொருட்களை இன்று வழங்கினர். அதில் குறிப்பிடும் படியாக அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை நீளமான(3 மீட்டர்) குழாயில் கொட்டி மறுமுனையில் மக்கள் தங்கள் பைகளில் பிடிக்கும்படி சில ரேஷன் கடைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்தந்த பகுதி அதிகாரிகளின் பிரத்தியேக யோசனையால் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடிகிறது, மேலும் நோய் தொற்று ஏற்படாமல் தவிர்க்க முடிகிறது என்று பொது மக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

error: Content is protected !!
WhatsApp chat