அவரு ஒரு காமெடி பீஸ்! அமைச்சரை கலாய்த்த ஆர். எஸ். பாரதி!

0
58

தமிழச்சி தங்கபாண்டியன் திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கோடம்பாக்கம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் நேற்றைய தினம் பிறந்த ஆறு பெண் குழந்தைகள் மற்றும் 4 ஆண் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வெள்ளி கொலுசுகள் வழங்கிய நிகழ்ச்சி திமுக தென்மண்டல மேற்கு இளைஞரணி சார்பாக நடைபெற்றது இதனைத்தொடர்ந்து திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி தென்மேற்கு இளைஞரணி செயலாளர் அன்பழகன் ஆகியோர் கோடம்பாக்கம் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு வருகை தந்து குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வெள்ளி கொலுசுகள் ஆகியவற்றை வழங்கியிருக்கிறார்கள்.

அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த ஆர் எஸ் பாரதி ஏழு தமிழர்கள் விடுதலை சம்பந்தமாக தமிழக ஆளுநரை திமுக சந்தித்து பேசியதை நாடகம் இன்று அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம் செய்தது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறிய அவர் அமைச்சர் செல்லூர் ராஜு ஒரு நகைச்சுவை நடிகர் என்று தெரிவித்திருக்கின்றார் அதேபோல ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தில் தங்களுக்கு எந்தவித உடன்பாடும் கிடையாது என்று அவர் தெரிவித்தார் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கியதற்கு திமுகவின் போராட்டமே காரணம் என்று தெரிவித்தார் ஆர் எஸ் பாரதி.

பணம் இல்லாதவர்கள் எதற்காக மருத்துவம் படிக்க வேண்டும் என்று திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்ததாக செய்தியாளர்கள் கேட்டபோது அது குறித்து தனக்கு எதுவும் தெரியாது ஆனால் திமுகவின் தலைவர் ஸ்டாலின் எடுப்பதே இறுதியான முடிவாக இருக்கும் என அவர் தெரிவித்தார் இதையடுத்து கோடம்பாக்கம் மகப்பேறு மருத்துவமனைக்கு வருகை தந்த தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் தேர்தலுக்கு இன்னும் 5 மாதம் இருக்கும் நிலையில் உதயநிதி பிரச்சாரத்தை ஆரம்பித்து இருப்பது கட்டாயமாக அல்லது பயமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நாங்கள் மக்களை சென்று சந்திக்கும் நிலைக்கு எங்களை ஆளும் கட்சி தள்ளி இருக்கின்றது என தெரிவித்திருக்கின்றார்.