தினமும் கருவேப்பிலையை இப்படி சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா!

0
60

தினமும் கருவேப்பிலையை இப்படி சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா!

ஆயுர்வேதத்தில் கற்ப மூலிகைகள் சில உள்ளன.இதில் கரு என்ற பெயரில் தொடங்கும்,
கருஞ்சீரகம்,கருந்துளசி,
கருவேப்பிலை,கருநொச்சி ஆகியவைகளை நாம் கற்ப மூலிகைகள் என்று கூறுகின்றோம்.இதுமட்டுமின்றி இந்த கற்ப மூலிகையில் ஏராளமான மருத்துவ பயன்கள் உள்ளதாக ஆயுர்வேதம் கூறுகின்றது.

கற்ப மூலிகையில் ஒன்றான கறிவேப்பிலையை நாம் தினமும் அன்றாடம் உணவில் பயன்படுத்தி தூக்கி எறியும் பொருளாக மட்டுமே பயன்படுத்தி வருகின்றோம்.
ஆனால் கருவேப்பிலையில் உள்ள நன்மைகளை பற்றியும்,அதன் சக்திகளை பற்றியும் நாம் அறிந்துள்ளோமா?இதில் தெரிந்துகொள்ளலாம்.

கறிவேப்பிலையில் உள்ள சத்துக்கள்!

கருவேப்பிலையில் விட்டமின் பி, விட்டமின் பி2,வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து போன்ற ஏராளமான சத்துகளை உள்ளடக்கியது.

கருவேப்பிலையை நாம் தினமும் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் அதிசயங்கள்!

தினமும் காலையில் 15 இலைகள் வீதம் கறிவேப்பிலையை தொடர்ந்து மூன்று மாதம் சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள எப்பேர்ப்பட்ட கொழுப்புகளும் கரைந்து உடல் வலுப்பெறும்.முக்கியமாக காலை வெறும் வயிற்றில் கருவேப்பிலை சாப்பிடுவதால் இடுப்பைச் சுற்றியுள்ள சதைகள் வேகமாக குறையும்.

இந்த கருவேப்பிலையானது கொழுப்பைக் கரைக்கும் திறன் கொண்டது இதயத்தில் தேவையற்ற கொழுப்புகள்
கூடுவதை கட்டுப்படுத்தும்,
மேலும் பெருந்தமனி தடிப்பு போன்ற இதயக் கோளாறுகளிலிருந்து நம்மை காக்கும்.

தினமும் நாம் கறிவேப்பிலையை ஏதாவது ஒரு விதத்தில் எடுத்துக் கொள்ளும்பொழுது நம் வயிற்றில் செரிமான மண்டலம் நன்றாக செயல்பட உதவும்.

தினமும் காலையில் இரண்டு பேரீச்சம்பழத்துடன் கறிவேப்பிலையை சாப்பிட்டு வந்தால் நம் உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து இரத்த சோகை நோயிலிருந்து நம்மை மீட்டெடுக்கும்.மேலும் ரத்தம் குறைவாக உள்ளவர்கள் இதனை சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்தத்தின் அளவு சீராகும்.

வெறும் வயிற்றில் கறிவேப்பிலையை சாப்பிட்டு வருவதால்,உடலின் சர்க்கரையின் அளவை சீர்படுத்தி சர்க்கரை நோயிலிருந்து நம்மை முழுவதுமாக மீட்டெடுக்கும்.

பெண்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் கருவேப்பிலை சாப்பிட்டு வந்தால் மூன்றே மாதத்தில் உங்கள் முடியின் வளர்ச்சியை நீங்கள் கண்கூடாக பார்க்க முடியும்.

கறிவேப்பிலையை நிழலில் உலர்த்தி அதை பொடி செய்து தினமும் இரண்டு வேளை ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை சிறிதளவு தேனுடன் கலந்து சாப்பிட்டு வருகையில் குழந்தைகளாகட்டும் பெரியவர்களாகட்டும் எப்படிப்பட்ட சளி தொந்தரவாக இருந்தாலும் உடனடி தீர்வு கிட்டும்.

கருவேப்பிலையை நாம் தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது நுரையீரலிலுள்ள நமக்கு தீங்கு விளைவிக்க கூடிய அனைத்து டாக்ஸின்களை முற்றிலும் ஒழித்துவிடும்.

தினமும் காலையில் கருவேப்பிலை சாற்றை குடித்து வந்தால்,கண்பார்வையை மேம்படுத்த உதவும். வயதான பிறகு வரும் கண் புரையை நீக்க இயற்கையாக உதவுகின்றது.

author avatar
Pavithra