ஸ்ரீமதியின் வழக்கு உயர்நீதிமன்றம் அதிரடி முடிவு ! கொலை அல்ல தற்கொலை?

0
85
Smt.'s case High Court action order! Suicide not murder?
Smt.'s case High Court action order! Suicide not murder?

ஸ்ரீமதியின் வழக்கு உயர்நீதிமன்றம் அதிரடி முடிவு ! கொலை அல்ல தற்கொலை?

கடந்த 13-ஆம் தேதி சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதி சின்னசேலம் அருகே கணியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்த பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தர். மேலும் இது குறித்து மாணவியின் பெற்றோர்கள் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி மாணவர்கள் சங்கம் மற்றும் தான்னர்வலர்கள் கலந்து கொண்டு போராட்டம்  நடத்தினார்கள்  அந்தப் போராட்டமானது மாலை நேரத்தில் வன்முறையாக வெடித்தது. மேலும் அதனைத் தொடர்ந்து மாணவியின் தந்தை மாணவியின்  உடலை மறுக்கூறாய்வு செய்ய வேண்டும் எனவும் மனு அளித்திருந்தார். அந்தமனுவை விசாரித்து நீதிபதிகள் மாணவியின் உடலை மறுபிரேதபரிசோதனை செய்ய உத்திரவிட்டனர்.

மேலும் இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு கடந்த நாட்களாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அந்த விசாரணையில் தற்ப்போது பல தடயங்கள் கிடைத்து வருகின்றனர். இதனைதொடர்ந்து மாணவியின் உடல் மறுக்கூறாய்வு செய்யப்பட்டது. அதன் பிறகு மாணவியின் உடலை பெற்றோர்ரிடம் ஒப்படைக்கப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட ஐந்து பேர்களும் ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.இந்த வழக்கில் ஐந்து பேருக்கும் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தது. மேலும் மாணவியின் இரு உடல்கூறாய்வு முடிவுகளையும் புதுச்சேரி ஜிப்பர் மருத்துவ குழுக்கள் ஆய்வு செய்து அந்த ஆய்வு முடிவுகளை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதனை விசாரித்த நீதிபதி மாணவி தற்கொலை தான் செய்து கொண்டார் அது கொலை இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.

author avatar
Parthipan K