ஸ்மார்ட்போன்கள் ரூ. 4 ஆயிரம் வரை விலை குறைப்பு

0
61
விவோ வி19 ஸ்மார்ட்போன் இந்தியாவில் சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையில் விவோ வி19 8 ஜிபி+128ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 24990 என்றும் 8 ஜிபி + 256 ஜிபி மெமரி மாடல் ரூ. 27990 என மாறி உள்ளது. அந்த வகையில் இரு மாடல்களின் விலை முறையே ரூ. 3 ஆயிரம் மற்றும் ரூ. 4 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. மாற்றப்பட்ட விலை விவோ இந்தியா இ ஸ்டோர், ப்ளிப்கார்ட் மற்றும் அமேசானில் பிரதிபலிக்கிறது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை விவோ வி19 மாடலில் 6.44 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர், 8 ஜிபி ரேம், காப்பர் டியூப் லிக்விட் கூலிங் தொழில்நுட்பம் மற்றும் கிளாஸ் சான்ட்விட்ச் டிசைன் கொண்டிருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஃபன்டச் ஒஎஸ் 10 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், 4500 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் விவோ ஃபிளாஷ்சார்ஜ் 2.0, யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டு உள்ளது.
author avatar
Parthipan K