கிரெடிட் கார்டில் இருந்து ஸ்மார்ட் பேமென்ட்: கூடுதல் கட்டணம் இல்லை!

0
136

கிரெடிட் கார்டில் இருந்து ஸ்மார்ட் பேமென்ட்: கூடுதல் கட்டணம் இல்லை!

கிரெடிட் கார்டை UPI Payment-வுடன் இணைத்து விட்டால் செலவு செய்தால் கூடுதல் கட்டணம் கிடையாது. இனி கிரெடிட் கார்டையும் ஸ்மார்ட் ஆக பயன்படுத்தலாம்.தற்போது UPI Payment என்பது டீக்கடை, காய்கறி கடை தொடங்கி முதல் பெரிய மால்கள் வரை வெகுவாக பிரபலமடைந்து வருகிறது. அனைத்து இடங்களிலும் நாம் UPI மூலம் கட்டணம் செலுத்துவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. ஆனால் கிரெடிட் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு மேலும் ஒரு இனிப்பான செய்தி.

கிரெடிட் கார்டு மூலம் யுபிஐடி வழியாக நீங்கள் கட்டணம் செலுத்திட முடியும்.நீங்கள் உங்கள் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை UPI ஐடியுடன் இணைத்து இருந்தால் போதும். உங்கள் வாலட்டில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை எவ்வாறு இணைப்பது என்று தெரிந்து கொள்வோம்.Paytm செயலியில் சென்று உங்களது ப்ரொபைலில் பேமெண்ட் செட்டிங்ஸ்க்கு செல்லவும், ஆட் நியூ கார்டு-யை தேர்ந்தெடுத்து அதில் உங்களது கிரெடிட் கார்டு தகவல்களை உள்ளீடு செய்யவும்.

சேமித்த காலை பின்னர் OTP எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். இதோ உங்களது UPI உடன் கிரெடிட் கார்டு இணைக்கப்பட்டு விட்டது. இதே போல் GPay மற்றும் Phonepe-விலும் செண்டிங்கிற்குள் சென்று இதேபோல் கிரெடிட் கார்டு தகவல்களை சேமித்து உடன் OTP உள்ளீடு செய்தால் கிரெடிட் கார்டு ஆனது இணைக்கப்பட்டு விடும்.இவற்றை இணைப்பதனால் என்ன பயன் என நீங்கள் நினைக்கலாம். UPI ID மூலம் அனைத்து இடங்களிலும் கிரெடிட் கார்டு மூலம் நீங்கள் பணம் செலுத்த முடியும். இதற்காக நாம் எந்தவித கட்டணம் செலுத்த தேவையில்லை, 2000 ரூபாய் வரை லிமிட் வழங்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K