பேருந்தில் மாணவிகளிடம் அவதூறு பேச்சு: சேலம் அரசு பேருந்து ஓட்டுனர் அதிரடி பணியிடை நீக்கம்!

0
90

பேருந்தில் மாணவிகளிடம் அவதூறு பேச்சு: சேலம் அரசு பேருந்து ஓட்டுனர் அதிரடி பணியிடை நீக்கம்!

பேருந்தில் ஏறும் ஆண்கள் அங்குள்ள பெண்களை தவறாக பார்த்தாலோஅல்லது தவறான முறையில் அவர்களிடம் நடந்து கொண்டாலும் பேருந்தில் இருந்து இறக்கி விட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விதிமுறையானது பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இருவருக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளது. அந்த வகையில் நேற்று சேலம் மாவட்டம் தாரமங்கலம் அடுத்த நங்கவள்ளி பகுதி மாணவர்கள் தினந்தோறும் பள்ளிக்கு தாரமங்கலம் வருவதுண்டு.

அவ்வாறு வரும் மாணவர்கள் தினந்தோறும் அரசு பேருந்தில் பயணிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் நேற்று அரசு பேருந்து ஓட்டுனர் பேருந்தில் ஏறிய மாணவிகளை அனைவரின் முன்னிலையிலும் அவதூறாக பேசியுள்ளார். இவ்வாறு ஓட்டுநர் அவதூறாக பேசியதை மாணவிகள் தங்களது பெற்றோரிடம் கூறியுள்ளனர். பெற்றோர் அவதூறாக பேசிய ஓட்டுநரை தடுத்து நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.இவ்வாறு பொதுமக்கள் போராட்டம் நடத்துவது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அதனையடுத்து போக்குவரத்து கழக கிளை மேலாளர் அந்த அரசு பேருந்து ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கலைத்து திரும்பினர். மாணவிகளை அவதூறாக பேசியதால் அரசு பேருந்து நடத்துனரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.