“ஸ்கேட்டிங் சாகச காவலர்கள்” – பாகிஸ்தான் காவலர்களின் புது வியூகம்!

0
87
Pakistani police respond outside the Chinese consulate after an armed attack on Nov. 23.

“ஸ்கேட்டிங் சாகச காவலர்கள்” – பாகிஸ்தான் காவலர்களின் புது வியூகம்!

காவல்துறை அதிகாரிகளை பார்த்தாலே இயல்பாக மக்கள் மனதில் ஒரு வித மதிப்பும், மரியாதையும் ஏற்படுகிறது. ஏனெனில், சக மனிதர்களை காப்பாற்றுவதற்காக அவர்கள் எடுக்கும் முயற்சியையும் ஈடுபாடும் காவலர்களை தனித்துவமாக சுட்டிக்காட்டுகிறது.

தற்போது பாகிஸ்தானில் இதேபோல ஒரு தனித்துவமான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். திருடர்களை பிடிப்பதற்காக “ரோலர் ஸ்கேட்டிங்” மூலம்  பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ரோலர் ஸ்கேட்டிங் மூலம் விளையாட்டு மட்டும் அல்ல வித்தியாசமாக, நாட்டிற்கு விரோத செயல்களை செய்வோர்களை பிடிப்பதற்கு என்று அவர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

பாகிஸ்தானில் உள்ள கராச்சி என்னுமிடத்தில் முதன்முதலாக இந்த ஸ்கேட்டிங் படை உருவாகியுள்ளது. இதற்காக அங்கு 20 காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 10 பெண் காவலர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பயிற்சியின் பின்பு இவர்கள் நாட்டின் முக்கிய சந்திப்பிலும், பாதுகாப்பு முக்கியமாக தேவைப்படும் இடங்களிலும்  ரோலர் ஸ்கேட்டிங் அணிந்து மற்றும் ஆயுதங்கள் பொருத்தப்பட்டு செயல்படுவார்கள் என்பது இதில் முக்கிய செய்தியாகும்.

author avatar
Parthipan K