ஆறு வயது நிரம்பியிருந்தால் போதும்! இந்த வகுப்பில் சேர்க்கை மத்திய அரசு வெளியிட்ட  தகவல்!

0
212
Holiday for school students.. Sudden announcement issued by the school education department!!
Holiday for school students.. Sudden announcement issued by the school education department!!

ஆறு வயது நிரம்பியிருந்தால் போதும்! இந்த வகுப்பில் சேர்க்கை மத்திய அரசு வெளியிட்ட  தகவல்!

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையின்படி அனைத்து குழந்தைகளுக்கும் மூன்று வயது முதல் 8 வயது வரையிலான ஐந்து ஆண்டுகள் கற்றல் வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என அடிப்படை கல்விக்கான காலகட்டமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகள் மழலையர்  கல்வியை தொடர்ந்து ஒன்றாம் மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கு இந்த ஐந்து ஆண்டுகள் அடிப்படை கல்வி திட்டத்தில் அடங்கும்.

மேலும் இந்த கல்வித் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் விதமாக அனைத்து மாநில அரசுகளுக்கும் இதனை மத்திய அரசு அறிவுறுத்தி வருகின்றது. அந்த அறிவுறுத்தலின்படி மத்திய கல்வி அமைச்சக உயர் அதிகாரி கூறுகையில் அனைத்து குழந்தைகளுக்கும் மழலையர்  கல்வி முதல் இரண்டாம் வகுப்பு வரை தடையற்ற கற்றல் மற்றும் திறன் மேம்பாட்டு கிடைப்பதை கல்விக் கொள்கை ஊக்குவிக்கின்றது.

அந்த வகையில் முதல் மூன்று ஆண்டுகள் அனைத்து குழந்தைகளுக்கும் அங்கன்வாடிகள் , அரசு உதவி பெறும் பள்ளிகள் அல்லது தனியார் பள்ளிகள் மூலமாக தரமான மழலையர் கல்வி கிடைக்கின்றது என்பதனை உறுதி செய்ய வேண்டும். ஒன்பதாம் வகுப்பில் குறைந்தபட்சம் ஆறு வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதினரை மட்டுமே சேர்க்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளையும் மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தி வருகின்றது.

குழந்தைகளின் உளவியல் மற்றும் மன நலனை கருத்தில் கொண்டு குழந்தைகளை மிகச் சிறிய வயதில் பள்ளிகளுக்கு அனுப்பக்கூடாது என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு வழக்கு ஒன்றில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. குழந்தைகளின் இந்த அடிப்படை கல்விக்கு தகுதி வாய்ந்த உரிய பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது மிக அவசியம்.

இதற்காக முன் பருவ பள்ளிக் கல்வியியல் இரண்டு ஆண்டு பட்டய படிப்பு திட்டத்தை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்  என மத்திய அமைச்சகம் கூறியுள்ளது.

author avatar
Parthipan K