சிக்கலின்றி முடிந்த படப்பிடிப்பு! மகிழ்ச்சியில் படக்குழு!

0
53

வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் பாரதிராஜா, எஸ்.ஏ சந்திரசேகர், எஸ். ஜே. சூர்யா பிரேம்ஜி, கருணாகரன், கல்யாணி பிரியதர்ஷன், போன்ற பலர் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இடைவெளி இல்லாமல் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார் நடிகர் சிம்பு. ஏனென்றால், முன்பைப் போன்று இல்லை என்ற காரணத்தால், எந்த சிக்கலும் வரவில்லை புயல் மழையை கூட பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இடைவெளியே இல்லாமல் புதுச்சேரியின் படப்பிடிப்பை சிறப்பாக முடித்து இருக்கின்றது படக்குழு. சிம்புவிற்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்த காரணத்தால், இது சாத்தியமானது என்று படக்குழு குறிப்பிடுகின்றது.

இந்த நிலையில், மாநாடு திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஏற்காடு பகுதியில் நடக்கவிருக்கிறது. ஆனாலும் இந்த படப்பிடிப்பில் சிலம்பரசன் கலந்து கொள்ளவில்லையாம் ஏனென்றால், சிலம்பரசன் கிறிஸ்துமஸ் காரணமாக அடுத்த ஒரு வாரத்திற்கு படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டாராம்.