கர்நாடக முதல்வரானார் சித்தராமையா! பாரட்டுகள் குவிந்து வருகின்றது!!

0
171
#image_title
கர்நாடக முதல்வரானார் சித்தராமையா! பாரட்டுகள் குவிந்து வருகின்றது!
கர்நாடக மாநிலத்தின் 24வது முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சித்தராமையா பதவி ஏற்றுக் கொண்டார். இதையடுத்து முதல்வர் சித்தராமையா அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றது.
நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் 135 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து முதலமைச்சர் பதவிக்கு சித்தராமையா அவர்களும் துணை முதலமைச்சர் பதவிக்கு டி கே சிவக்குமார் அவர்களும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து சித்தராமையா அவர்கள் ராஜ்பவனுக்கு சென்று கவர்னரிடம் ஆட்சி அமைக்க கோரினார். இதையடுத்து இன்று அதாவது மே 20ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் என்று காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது.
இன்று பெங்களூரூவில் உள்ள கண்டீவாரா ஸ்டேடியத்தில் முதலமைச்சர் பதவியேற்பு விழா கோலகலமாக நடைபெற்றது. இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சி தலைவர் சித்தராமையா முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். கர்நாடக மாநிலத்தில் இரண்டாவது முறையாக பதவியேற்றுக் கொண்ட சித்தராமையா அவர்களுக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் அவர்கள் பதவிப் பிரமாணம் செய்து வைத்து ரகசிய காப்பு பிரமாணத்தையும் செய்து வைத்தார்.
இவரைத் தொடர்ந்து டி கே சிவக்குமார் அவர்கள் துணை முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். துணை முதலமைச்சர் டி கே சிவக்குமார் அவர்களை தொடர்ந்து 8 மந்திரிகளும் பதவியேற்றுக் கொண்டார். இவர்களுக்கும் கவர்னர் அவர்கள் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின், ஜம்மூ காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாடு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா, ஜம்மூ காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும் மக்கள் ஜனநயாகக் கட்சி தலைவர் மெகபூபா முப்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், பீகார் முதல்வர் நித்திஷ் குமார் உள்பட பல்வேறு கட்சித்தலைவர்கள் இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.