Connect with us

Breaking News

உன் ஷட்டரை சாத்திட்டு போமா.. காயத்திரி ரகுராமை விளாசும் திருச்சி சூர்யா!! ஓயாத கதவு பஞ்சாயத்து!!

Published

on

Shut your shutter.. Trichy Surya who blasts Gayatri Raghuram!! Unrelenting Door Panchayat!!

உன் ஷட்டரை சாத்திட்டு போமா.. காயத்திரி ரகுராமை விளாசும் திருச்சி சூர்யா!! ஓயாத கதவு பஞ்சாயத்து!!

சிறுபான்மையினர் அணி தலைவி டெய்சியை திருச்சி சூர்யா சிவா அவதூறாக பேசிய வீடியோ வெளியானதை அடுத்து திருச்சி சூரிய சிவா கட்சியை விட்டு சிறிது காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டார். பின்பு தானாகவே முன்வந்து திருச்சி சூர்ய சிவா கட்சியை விட்டு விலகுவதாக தெரிவித்தார். இதனிடையே காயத்ரி ரகுராம் இப் பிரச்சனையில் சற்று மூக்கை நுழைத்ததால் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

Advertisement

இவர்கள் இருவரும் கட்சியை விட்டு வெளியேறினாலும் ட்விட்டரில் தினந்தோறும் சலிப்பில்லாமல் சண்டையிட்டு வருகின்றனர். காயத்ரி ரகுராம் கட்சியை விட்டு விலகியும் அண்ணாமலையை ஏதாவது ஒரு நோக்கத்தில் டார்கெட் செய்ய வேண்டும் என எண்ணி தினம் தோறும் என்னிடம் சண்டைக்கு வா என்ற பாணியில் தொடர்ந்து ட்விட்டரில் வம்பு இழுத்து வருகிறார்.

காயத்ரி செய்யும் ட்வீட் க்கு, அண்ணாமலை ஒரு பக்கம் அமைதி காத்தாலும் தானாடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பது போல், கட்சியை விட்டு விலகி போனாலும் சூர்ய சிவா அண்ணாமலைக்கு நிகரான பதிலளித்து வருகிறார்.

Advertisement

உங்களுக்கு தைரியம் இருந்தால் என்னுடன் நேருக்கு நேர் போட்டியிடுங்கள் என அண்ணாமலைக்கு ட்வீட் செய்ததற்கு அவர் ஏதும் பதில் அளிக்கவில்லை. ஆனால் திருச்சி சூர்ய சிவா இவருக்கு தொடர் பதில் அளித்து வருகிறார்.

அந்த வகையில் தமிழக பாஜக அண்ணாமலை மற்றும் பாஜக எம் பி தேஜஸ்வி ஆகியோர் விமானத்தில் சென்றபோது அவசரகால கதவை தேஜஸ்வி சிறந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Advertisement

இதுகுறித்து விளக்கம் அளிக்க கோரி மத்திய விமான போக்குவரத்து துறை தெரிவித்த பொழுதும், நான் தெரியாமல் அவசரகால கதவை திறந்து விட்டேன் என தேஜஸ்வி தெரிவித்ததை அடுத்து இந்த பிரச்சனை அத்துடன் முடிவடைந்தது. ஆனால் காயத்ரி ரகுராம் இதனை விடாமல், தேஜஸ்வியை டார்கெட் செய்து, மற்ற பயணிகளின் உயிரை பணயம் வைக்கும் விதத்தில் சக மனிதரால் எந்த ஒரு செயலையும் செய்ய முடியாது.

அதற்கு மாறாக ஒரு பைத்தியம் அல்லது மன அழுத்தம் உள்ளவர் தான் செய்ய முடியும் அதேபோல் அவ்வாறு செய்வதையும் ஒரு மன அழுத்தம் அல்லது பைத்தியம் தான் பார்த்துக் கொண்டு உட்கார முடியும் என்று கேலி கிண்டலுடன் ட்வீட் செய்திருந்தார்.

Advertisement

இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் திருச்சி சூர்ய சிவா, கதவுனு வந்துட்டாலே உனக்கு என்னம்மா பிரச்சனை?? கண்ணாடி போட்ட கதவுக்கும் பிரச்சனை, கதவைத் திறந்தாலும் பிரச்சனை, நீ கொஞ்சம் உன் கதவை மூடிகிட்டு இருக்கியா என்று மீண்டும் சர்ச்சையை கிளப்பும் விதத்தில் ட்வீட் செய்துள்ளார்.தொடர்ந்து இவர்கள் ட்விட்டரில் செய்து கொள்ளும் சண்டையானது மற்றவர்களுக்கு வேடிக்கை காட்சியாக உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement