தி நகரில் உள்ள மாநகராட்சி பள்ளி மருத்துவமனையாக மாற்றமா?

0
98

தி நகரில் உள்ள அரசு பள்ளியை மருத்துவமனையாக மாற்ற சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை வைத்துள்ளார்.

சென்னையில் மக்கள் அதிகம் இருக்கும் இடங்களில் தி நகர் முக்கியமாக உள்ளது. பல வணிக வளாகங்கள், கடைகள் என அனைத்து பொருட்களும் கிடைக்கும் இடமாக தி நகர் உள்ளதால் எல்லா நேரங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள நிலையில், அவசர சிகிச்சைக்கு மருத்துவமனை இல்லாதது குறையாக உள்ளது.

இந்நிலையில், பாண்டிபஜார் மாநகராட்சி தொடக்கபள்ளி அமைந்துள்ள இடத்தில் மருத்துவமனை அமைக்கலாமா என்ற யோசனையை தி நகர் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி மாநகராட்சிக்கு கடிதம் எழுதினார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், அந்த பள்ளியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் மற்றோரு மாநகராட்சி பள்ளி உள்ளது. அதனால், இந்த பள்ளியில் உள்ள மாணவர்களை அந்த பள்ளிக்கு மாற்றினால் எந்த விதமான சிரமும் இருக்காது என கூறினார்.

இங்கு 11 கிரவுண்ட் நிலம் இருப்பதாகவும் தி நகரில் வேறு இடம் இல்லை எனவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அந்த இடத்தில் கட்டிடங்கள் கட்ட முடியுமா? மருத்துவமனை அமைப்பதற்கான சூழல் இருக்கிறதா என ஆராய்ந்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மருத்துமனை கட்ட அனுமதி கிடைக்கும் பட்சத்தில் கல்வியாண்டு முடிவில் மாணவர்களை அருகில் உள்ள மற்றொரு பள்ளிக்கு மாற்றிவிட்டு ம்கட்டிடங்களை கட்டும் பணி நடைபெறும் என தெரிவித்தார். மருத்துவமனை குறித்து சாத்திய கூறுகளை மாநகராட்சி ஆராய்ந்து முடிவு செய்யும் எனவும் தெரிவித்துள்ளார்.