இந்த மாவட்டங்களில் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும்- அரசு அறிவிப்பு!

0
94

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதேபோல தற்போது எண்ணிக்கை குறைந்து வருவதாக சொன்னாலும் பல மாவட்டங்களில் இன்னும் தொற்று குறைந்தபாடு இல்லை என்றே கூறலாம். குறிப்பாக சேலம் ஈரோடு கோவை திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தொற்று அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. அதனால் அந்த மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கையாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக கடைகள் வர்த்தக நிறுவனம் உணவகங்கள் ஆகியவை ஆகஸ்ட் 16ம் தேதியிலிருந்து மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கட்டுப்பாடு 23ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் காவல் களப்பணியாளர்கள் ஆகியோருடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை மேற்கொண்டு நேர கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளார். அதன்படி கடைகள் வர்த்தக நிறுவனங்கள் உணவகங்கள் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் 16ம் தேதியிலிருந்து 23ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

மற்ற மாவட்டங்களிலும் கடைகள் செயல்படும் நேரங்கள் குறைக்கப்பட உள்ளதாகவும், அதிக மக்கள் கூடும் இடங்களில் உள்ள கடைகள், நகைக் கடைகள், ஜவுளி கடைகள், டாஸ்மாக் கடைகள் போன்றவை இயங்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் கோயில்கள் ஆகியவற்றில் பக்தர்கள் வழிபடவும் தடைகள் விதிக்கப் பட்டுள்ளன என்று சொல்லப்படுகிறது.

author avatar
Kowsalya