ஏகே 62 வின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகின்றது! பிரேக்கே இருக்கக் கூடாது அஜித் போட்ட கண்டிஷன்!

0
377
Shooting of AK62 starts next month! Ajith put the condition that there should be no brakes!
Shooting of AK62 starts next month! Ajith put the condition that there should be no brakes!

ஏகே 62 வின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகின்றது! பிரேக்கே இருக்கக் கூடாது அஜித் போட்ட கண்டிஷன்!

கடந்த ஜனவரி 11ஆம் தேதி இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் துணிவு. அதே நாளில் விஜயின் வாரிசு படமும் வெளியானதால் இந்த இரண்டு படத்திற்கும் போட்டிகள் இருந்தது. இந்நிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் துணிவு படத்தை தொடர்ந்து அஜித் அவருடைய 62வது படம் நடிக்க உள்ளார். அந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது. ஆனால் இயக்குனர் விக்னேஷ் சிவன் அதற்கான கதையை தயார் செய்யவில்லை. அதனால் அஜித் 62வது படத்தின் இயக்குனர் மாற்றப்பட்டுள்ளார் அவர் தடையற்ற தாக்க, தடம் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி தான்.

மேலும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிற.து இந்த படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

தற்போது இயக்குனராக ஒப்பந்தமாகி இருக்கும் மகிழ் திருமேனிக்கு அஜித் ஒரு கண்டிஷன் போட்டிருக்கிறார். அதில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படம் குறித்து அறிவிப்பு வெளியான போது 2023 ஆம் வருடம் அக்டோபர் 19 ஆம் தேதி ஆயுத பூஜைக்கு அந்த படம் திரைக்கு வரும் என அறிவித்துவிட்டார்கள்.

அதுபோலவே தன் 62 வது படத்தின் அறிவிப்பு வெளியாகும் பொழுது இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவித்த பிறகு படத்தை ஆரம்பிக்க வேண்டும் என அஜித் கூறியுள்ளார். நான்கு மாதங்களில் மொத்த படப்பிடிப்பையும் முடித்து விட வேண்டும் இதில் எவ்வித பிரேக்கும் கொடுக்கக் கூடாது என கண்டிஷன் போட்டுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. 62 ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
Parthipan K