ஐயப்பன் பக்தர்களுக்கு அதிர்ச்சி செய்தி! சபரிமலை கோவிலில் வழங்கப்படும் பிரசாதத்தில் விஷம்!

0
170
Shocking news for Ayyappan devotees! Poison in the offerings offered at the Sabarimala temple!
Shocking news for Ayyappan devotees! Poison in the offerings offered at the Sabarimala temple!

ஐயப்பன் பக்தர்களுக்கு அதிர்ச்சி செய்தி! சபரிமலை கோவிலில் வழங்கப்படும் பிரசாதத்தில் விஷம்!

பக்தர்கள் அதிகளவு மாலை அணிந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை ஐயப்பன் கோவில் தான்.அங்கு ஆண்டுதோறும் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கபடுவது வழக்கம் தான்.அந்தவகையில் இந்த ஆண்டும் நடை திறக்கப்பட்டது.அப்போது இருந்தே தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.மேலும் சபரிமலையில் மகர ஜோதி தரிசனமானது வரும் ஜனவரி 14 ஆம் தேதி நடைபெற உள்ளது.இதனை நேரில் காண லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் வருவது வழக்கம் தான்.அப்போது சபரிமலையில் ஐயப்பனுக்கு நைவேத்தியமாக அரவணைப்பாயாசம் படைக்கபடுவது வழக்கம் தான்.

தற்போது மகர விளக்கு பூஜைக்கு வரும் பக்தர்களுக்கான கூடுதலாக அரவணைப்பாயசம் தாயரிக்கபட்டு வருகின்றது.இந்நிலையில் ஏலக்காய் வியாபாரி ஒருவர் சர்ச்சை பதிவு ஒன்றை கிளப்பினார் அதில் அரவணைப்பாயாசத்தில் ஏலக்காய் தரம் குறைவாக இருப்பதாக கூறினார்.ஏலக்காயை கொள்முதல் செய்ய சபரிமலை தேவசம் போர்டு ஏலம் ஏற்பாடு செய்திருந்தது.இந்த ஏலத்தில் பங்கேற்று தோல்வியடைந்தது.இதுகுறித்து மாநில உயர்நீதிமன்றத்தில் வழங்கு தொடர்ந்திருந்தார்.

அந்த குற்றச்சாட்டை ஏற்ற நீதிமன்றம் அரவணைப்பாயாசத்தில் பயன்படுத்தப்படும் ஏலக்காயின் தரத்தை பரிசோதனை செய்ய உத்தரவுபிறபிக்கபட்டது. அந்த உத்தரவின் பேரில் திருவனந்தபுரத்தின் உணவுப் பொருள் ஆய்வு கழகத்தால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.அதில் பல அதிர்ச்சி செய்திகள் வெளிவந்தது.அப்போது அதில் அரவணைப்பாயாசத்தில் பயன்படுத்தப்பட்ட ஏலக்காயை விட அதிக அளவு பூச்சிகொல்லி மருந்து கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதற்கு தேவசம் போர்டு சார்பில் பதில் கூறுகையில் கொள்முதல் செய்யப்பட்ட ஏலக்காய் பற்றாக்குறையின் காரணமாக உள்ளூர் சந்தையில் ஏலக்காயை மீண்டும் கொள்முதல் செய்ததில் ஏதேனும் தவறு நிகழ்ந்திருக்கும் என தெரிவித்தது. அதனை தொடர்ந்து இந்த அரவணைப்பாயசத்தை பக்தர்களுக்கு வழங்க முடியாது அதனால் ஆறு லட்சம் டன் அரவணைப்பயாச டின்களையும் உடனடியாக சீல் வைத்து அழிக்க வேண்டும்.இதனை தேவசம் போர்டு உறுதி செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.அதனால் புதிய அரவணைப்பயாசம் தயாரிக்கப்படவேண்டும்.நாளை முதல் புதிய அரவணைப்பயாசம் விநியோகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கபடுகின்றது.

author avatar
Parthipan K