கொரோனா நோயாளியை உடற்கூறு ஆய்வு செய்ததில் வெளிவந்த திடுக்கிடும் தகவல் !!

0
57

கொரோனா பாதித்து உயிரிழந்த கொரோனா நோயாளிகளின் உடல்களை மிக கவனத்துடன் கையாண்டு தற்பொழுது வரை நல்லடக்கம் செய்து வந்த நிலையில், பெங்களூரு பகுதியில் முதல் முதலாக நோயாளியை பிரேத பரிசோதனை உடற்கூரய்வு செய்யப்பட்டது.

கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு பலியான ஒருவரின் உடல் 15 மணி நேரத்திற்கு பின்பு, தடயவியல் துறை நிபுணர் தினேஷ் ராவ் உடற்கூறு ஆய்வு செய்து பல்வேறு அதிர்ச்சியான தகவல்களை வெளியிட்டார்.

ஆக்ஸ்போர்ட் மருத்துவ கல்லூரியில் தடயவியல் மருத்துவம் பயின்ற மருத்துவர் தினேஷ் ராவ், தற்பொழுது உயிரிழந்த 60 வயது முதியவர் ஒருவர் உடலை கடந்த புதன்கிழமையன்று உடற்கூறு ஆய்வு செய்தார். அதில் கருணா நோய்த்தொற்றில் பாதிக்கப்பட்டவர்களின் உடலை என்னவெல்லாம் செய்வது செய்து இருந்தது என்பதனை கண்டறியும் வகையில், மருத்துவர் தினேஷ் ராவ் பல ஆராய்ச்சி தரமான தகவல்களை கண்டுள்ளார்.

அவர் கொரோனா நோயாளிகளை உடற்கூறு ஆய்வு செய்ததில், உயிரிழந்த நோயாளிகளின் கழுத்து ,முகம் தோல் பகுதிகளை தனித்தனியாக ஆராய்ந்து கண்டறிந்தில் எங்கும் நோய் தொற்று இல்லை. ஆனால், ஆர் டி பி சி ஆர் பரிசோதனையில் மூக்கு மற்றும் தொண்டைப் பகுதிகளில் கொரோனா வைரஸ் பதுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பொதுவாக ஒரு மனிதனின் நுரையீரல் என்பது மென்மையான பஞ்சு போன்று இருக்கும், ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மனிதனின் நுரையீரல் கணமாக இருந்ததாக தெரிவித்தார். 600 முதல் 700 கிராம் எடை கொண்டுள்ள நுரையீரல் பாதிக்கப்பட்டவர்களின் மட்டும் 2.1 கிலோவாக இருந்ததாக கூறினார் .மேலும், தொடும்போது கடினமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மற்ற வெளிநாடுகளில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களை விட, இந்தியாவில் நோயின் தாக்கம் வேறு பட்டிருப்பதாகவும், நுரையீரல் பகுதியை தாக்குவது வேறு பட்டிருப்பதாகவும், உடற்கூறு மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
Parthipan K