ஜூலை 1 ஆம் தேதியிலிருந்து மோட்டார் வண்டிகளின் விலை உயர்வு! வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்!

0
102
Shocking information released by Hero Motors !!
Shocking information released by Hero Motors !!

ஜூலை 1 ஆம் தேதியிலிருந்து மோட்டார் வண்டிகளின் விலை உயர்வு! வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்!

ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் ஜூலை 1ம் தேதி முதல் தங்களுடைய தயாரிப்புகளான மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் ஆகியவற்றின் விலையை உயர்த்துகிறது. இந்த விலை உயர்வு ,வாகன ஓட்டிகளான மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய நிறுவனமான இருசக்கர ஹீரோ மோட்டோர் நிறுவனம் தான் உலகில் புகழ் பெற்ற நிறுவனமாக விளங்குகிறது. ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் வாகனங்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளது. அதாவது கமாடிட்டி விலை உயர்வு, பணவீக்கம், உள்ளீட்டுப் பொருட்கள் விலை உயர்வு காரணமாக வாகனங்கள் விலை ரூ.3000 வரை விலையை உயர்த்துவதாக ஹீரோ மோட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆட்டோமொபைல் துறையில் வாகன மூலதன பொருட்களின் விலைகள் மிகப்பெரிய அளவில் எட்டியுள்ளது. கடந்த ஆண்டு பரவி வந்த கொரோனாவின் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இந்தியாவில் மட்டுமல்ல சர்வதேச அளவிலும் பல கடுமையான கட்டுப்பாடுகள் நிலவியிருந்தது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுகள்,தேர்ட் பார்ட்டி இன்சூரன்ஸ் கட்டண உயர்வு ஆகியவற்றிற்கு மத்தியில் நடுத்தர குடும்பத்தினரும் மற்றும் ஏழை மக்களும் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வருகிறார்கள்.

இந்த சூழலில் ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் வாகனங்களின் டிசைன்க்கு ஏற்றவாறு விலையை உயர்த்துவது என்ற அறிவிப்பு வாகனம் வாங்க விரும்புவர்களுக்ககு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் பங்குச்சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில் கமாடிட்டி விலை உயர்வு, பணவீக்கம் மற்றும் உள்ளீட்டுப் பொருட்கள் விலை உயர்வு போன்றவற்றால் வாகனங்கள் விலை ரூ.3000 வரை விலையை உயர்த்துகிறோம் எனவும் ,இந்த விலை உயர்வு ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு  மாடல் மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கும் எவ்வளவு விலை உயர்வு என்பது குறித்து எந்த ஒரு விதமான விளக்கமும் ஹீரோ மோட்டார்ஸ் அளிக்கவில்லை.சந்தையில் ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் 100 சிசி முதல் 200 4வி மாடல் வரை விற்பனை செய்கிறது. இதில் ஹெச்எப் 100 மோட்டார் சைக்கிள் ரூ.51,450ஆகவும், எக்ஸ்பல்ஸ் 2004வி மாடல் ரூ.1.32 லட்சமாகவும் விற்பனை செய்து வருகிறது . இதனால் ஹீரோ மோட்டார்ஸ் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

author avatar
Parthipan K