கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர் திடீர் உயிரிழப்பு! நாடு முழுவதும் ஏற்பட்ட பேரதிர்ச்சி!

0
98

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவிய காரணத்தால் ,நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் பிறகு இந்த நோயின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்தநிலையில் அந்த நோய்க்கான தடுப்பு மருந்தும் தற்போது பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது.

அந்த விதத்தில் இந்திய நாடு முழுவதும் இந்த நோய்க்கான தடுப்பூசி போடும் திட்டமானது சென்ற 16-ஆம் தேதி முதல் ஆரம்பித்து நடந்து வருகிறது .முதல் கட்டமாக எல்லா மாநிலங்களிலும் இருக்கின்ற மருத்துவ பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.

அதேபோல, தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் இருக்கின்ற ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றில் 42 வயது நிரம்பிய சுகாதாரப் பணியாளர் ஒருவர் நேற்று முன்தினம் இந்த தடுப்பூசியை போட்டுக் கொண்டார். அதன் பிறகு தன்னுடைய வழக்கமான வேலைகளுக்கு பின் அவர் வீடு திரும்பியிருக்கிறார். இந்த நிலையில் நேற்று இரவு இரண்டு முப்பது மணி அளவில் அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு இருக்கிறது. அவரை உடனே அருகில் இருக்கக்கூடிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் பரிசோதித்த பின் தெரிவித்து இருப்பதாக தெரியவந்திருக்கிறது.

தடுப்பூசி போட்டுக்கொண்ட அடுத்த நாளே அந்த நபர் உயிரிழந்த இருப்பது நாடு முழுவதும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. இதற்கு இடையில் அவருடைய மரணத்திற்கு தடுப்பூசி எந்த விதத்திலும் காரணம் கிடையாது என்று முதல்கட்ட கண்டுபிடிப்பில் தெரியவந்திருக்கிறது. அதே சமயத்தில் அவருடைய பிரேத பரிசோதனையில் முடிவுகள் என்ன என்பதை வைத்து கூடுதல் தகவலை நாம் எதிர்பார்க்கலாம். முதலில் தடுப்பூசி திட்டத்தை தொடங்கியபோதே மத்திய அரசு இந்த மருந்து பாதுகாப்பானது, வதந்திகளை நம்பவேண்டாம் என தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது இந்த மரணத்தால் இந்த மருந்தின் மீது மக்களுக்கு பீதி ஏற்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.