எடப்பாடிக்கு அதிர்ச்சி வைத்தியம் ? செந்தில்பாலாஜிக்கு அசைன்மென்ட் ரெடி ?

0
226
Shock treatment for weight loss? Assignment ready for Senthilbalaji?
Shock treatment for weight loss? Assignment ready for Senthilbalaji?

எடப்பாடிக்கு அதிர்ச்சி வைத்தியம் ? செந்தில்பாலாஜிக்கு அசைன்மென்ட் ரெடி ?

தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக மிகவும் பரபரப்புடன் காணப்படுகிறது அதற்க்கு காரணம் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்நாள் முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து பேசிவருவது தான். ஈரோடு இடைதேர்தலில் வேட்டிகட்டிய ஆண்மகனாக இருந்தால் என்பதில் தொடங்கி, நீ கருணாநிதி மகன்தான் யார் இல்லைன்னு சொன்னது என்பது வரை, அசால்ட்டாக பேசிய பேச்சுக்கள் தான் தமிழகத்தில் தற்போது பேசும் பொருளாக உள்ளது.

எடப்பாடியின் இந்த பேச்சுக்கு ஒரு செமையான அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பதற்கு முதல்வர் தரப்பில் இருந்து செந்தில்பாலாஜிக்கு ஒரு அசைன்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளதாம், மற்ற கட்சிகளிலிருந்து ஆட்களைஅழைத்து வருவது திமுகவில் செந்தில்பாலாஜியை விட்டால் ஆள் இல்லை, தற்போது அவருக்கு புது அசைமென்ட் தரப்பட்டுள்ளது.

அதிமுகவில் தொண்டர்களை அழைத்து வருவதைவிட இம்முறை, எடப்பாடிக்கு நெருக்கமான பெரிய புள்ளிகளை அதிலும் குறிப்பாக சட்டமன்றத்தில் நமக்கு ஆதரவாக செயல்பட்டு கைதட்டும் அளவிற்கு முக்கிய புள்ளிகளை எடப்பாடியிடம் இருந்து தூக்கிவிடவேண்டும் என்று செந்தில்பாலாஜிக்கு அசைமென்ட் தரப்பட்டுள்ளதாகவும்.

இதனிடையே எடப்பாடி மீது கட்சியில் அதிருப்தியில் உள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து அவர்களின் பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் விரைவில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தங்களது தொகுதி குறித்து பேசவைக்க செந்தில்பாலாஜி இடம் அசைமென்ட் முதல்வர் தரப்பில் தரப்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். எது எப்படியோ அமைச்சர் செந்தில்பாலாஜி என்ன மாதிரி அதிர்ச்சி வைத்தியத்தை எடப்பாடிக்கு தரபோகிறார் என்று பொறுத்திருந்து தான் பார்க்க முடியும்.