அதிர்ச்சி வெளியீடு நாட்டில் 3 ஆயிரத்தை கடந்த ஒமைக்ரான் பாதிப்பு! எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு பாதிப்பு!!

0
62

அதிர்ச்சி வெளியீடு நாட்டில் 3 ஆயிரத்தை கடந்த ஒமைக்ரான் பாதிப்பு! எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு பாதிப்பு!!

கொரோனாவை தொடர்ந்து ஒமைக்ரான் வைரஸ் தொற்றின் பரவல் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக நாட்டில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றின் பரவலை தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அவற்றை கட்டுப்படுத்த அந்தந்த மாநிலங்கள் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

இந்நிலையில் நேற்று காலை நிலவரப்படி ஒமைக்ரானால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2630ஆக இருந்த நிலையில் இந்தியாவில் தற்போதய நிலவரப்படி ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,007 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் மாநில வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையையும்  மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

இதன்படி மராட்டியத்தில் 876 பேரும், டெல்லியில் 465 பேரும், கர்நாடகத்தில் 333 பேரும், ராஜஸ்தானில் 291 பேரும், கேரளாவில் 284 பேரும், குஜராத்தில் 204 பேரும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அரியானாவில் 114 பேரும், தெலுங்கானாவில் 107 பேரும், ஒடிசாவில் 60 பேரும் மற்றும் உத்தரபிரதேசத்தில் 31 பேரும் இந்த ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திராவை பொறுத்த வரை 28 பேரும், மேற்கு வங்காளத்தில் 27 பேரும், கோவாவில் 19 பேரும், அசாமில் 9 பேரும், மத்திய பிரதேசத்தில் 9 பேரும், உத்தரகாண்டில் 8 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேகாலயாவில் 4 பேரும், சண்டிகர் மற்றும் காஷ்மீரில் தலா 3 பேரும், புதுச்சேரியில் 2 பேரும், இமாச்சல பிரதேசம் மற்றும் லடாக்கில் தலா  ஒருவருக்கும் என ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்த வரை 121 பேர் இந்த ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

author avatar
Parthipan K