225 பொறியியல் கல்லூரிகளுக்கு ஷாக் நியூஸ்? நோட்டீஸ் கொடுத்த அண்ணா பல்கலைக்கழகம்?

0
71
Shock news for 225 engineering colleges? Anna University gave notice?
Shock news for 225 engineering colleges? Anna University gave notice?

225 பொறியியல் கல்லூரிகளுக்கு ஷாக் நியூஸ்? நோட்டீஸ் கொடுத்த அண்ணா பல்கலைக்கழகம்?

தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கு அடிப்படை வசதிகள் இல்லாமை, உரிய கட்டமைப்பு இல்லாமை, மாணவர்களுக்கு அறிவை புகட்டும் வகையில்  தகுந்த பேராசிரியர்கள் இல்லாதது ஆகியவை  குறித்து விளக்கம் அளிக்குமாறு 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும் இந்த குறைபாடுகளை தொடர்ந்து இரண்டு வாரத்திற்குள் சரி செய்தால் மட்டுமே நடப்பாண்டில் பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படும் எனவும் மேலும் இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்காவிட்டால் அங்கீகாரம் நீட்டிப்போம். வரும் ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது.

இந்த நோட்டீஸ் மூலம் அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கல்லூரிகளுக்கு பகீரங்கமாக  எச்சரிக்கை விடுத்துள்ளது.முன்பாக 476 பொறியியல் கல்லூரிகளை தொடர் ஆய்வு செய்த அண்ணா பல்கலைக்கழகம் 255 கல்லூரிகளில் உரிய கட்டமைப்பு வசதி இல்லாமலும், அதற்கு தகுதியான ஆசிரியர்கள் இல்லாததை கண்டறிந்த நிலையில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதனிடையே பிஇ பி.டெக் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு இதுவரை 1,43,313-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாகவும் 96,759-க்கும் மேற்பட்டோர் கட்டணம் செலுத்தியுள்ளனர். 65,171 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு தெரிவித்திருக்கின்றனர்.

author avatar
Parthipan K

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here