பேரதிர்ச்சி டெபாசிட்டை இழந்த ஆளும் கட்சி!

0
62

தமிழகத்திலுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. இதில் 61 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. முறைகேடு புகார் காரணமாக, சென்னை உட்பட 4 மாவட்டங்களில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நேற்று மறு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இன்று காலை 8 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பமானது, தமிழ்நாடு முழுவதும் 279 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.

இதில் பெரும்பாலான மாநகராட்சிகளில் ஆளும் கட்சியான திமுக முன்னிலை பெற்றிருக்கிறது. அதோடு பல பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளை ஆளும் தரப்பு கைப்பற்றியிருக்கிறது.

உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான பகுதிகளை திமுக கைபற்றி இருந்தாலும் திருப்பூர் மாவட்டம் குண்டடம் பேரூராட்சி 9வது வார்டு திமுக டெபாசிட் இழந்தது. அங்கே பாஜக வேட்பாளர் 230 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். திமுக 30 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட்டை இழந்தது. இது திமுகவினரிடையே அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.